வெளியானது சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ டிரெய்லர்!
தெலுங்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா நடித்துள்ளப் படம் ‘மா இன்டி பங்காரம்’. இந்த படத்திற்கு ‘தமிழில் எங்கள் தங்கம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
‘ஓ பேபி’ திரைப்படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தை ட்ரைலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.சமந்தாவின் கணவரான ராஜ் நிடிமோரு இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.சமந்தாவுடன் இணைந்து குல்ஷன் தேவையா, திகந்த், கவுதமி, ஆனந்த், ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன்.19ஆம் தேதி வெளியாக உள்ளது.

