LJK வாக்குறுதிகள் விளக்கவுரை கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட்டில், LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பான விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு வாக்குறுதிகளின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
வில்லியனூர் JCM மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூக சேவகி கிரிஜா விளக்கவுரையை தொகுத்து வழங்கினார். அவர், மக்களின் அன்றாட தேவைகள், பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து வாக்குறுதிகள் எவ்வாறு அமையவுள்ளன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, தங்களது கருத்துகள் மற்றும் சந்தேகங்களை முன்வைத்தனர். நிகழ்ச்சி முடிவில், சமூக நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு முக்கியம் என வலியுறுத்தப்பட்டது.
இந்த விளக்கவுரை கூட்டம், மக்களிடையே LJK வாக்குறுதிகள் குறித்த புரிதலை அதிகரிக்கும் வகையில் அமைந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

