கிராமங்களுக்கு எதிரான திட்டம்: ராகுல் காந்தி
20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA) ஒரே நாளில் தகர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விபி ஜி ராம் ஜி (VPG Ram Ji) எனப்படும் புதிய நடைமுறை, MGNREGAவின் மறுசீரமைப்பு அல்ல என்றும், உரிமை சார்ந்த வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் அடிப்படை தன்மையை முற்றிலும் மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் இனி வேலைவாய்ப்பு உத்தரவாதமாக இல்லாமல், டெல்லியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். இது மாநில அரசுகளுக்கும், கிராமங்களுக்கும் எதிரான நடவடிக்கை என்றும், உள்ளாட்சிகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், தொழிலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த மாற்றங்களுக்கு எதிராக போராடி MGNREGA திட்டத்தின் அடிப்படை உரிமை சார்ந்த தன்மையை பாதுகாப்போம் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
இந்த விமர்சனம், மத்திய அரசின் புதிய நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

