சூடுபிடித்த அரசியல் களம்… வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சித் தலைவர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. அணைத்து கட்சி வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா (விருத்தாசலம்), தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர்) உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மேலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 8-வது முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிடுகிறார். 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் கே.பழனிசாமி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உடன் இருந்தார்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் உடனிருந்தார்.

அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிகழ்வின்போது மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உடனிருந்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் எல்.முருகன் வழிபாடு செய்தார்.

மதுரை தெற்கு தொகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
  • திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 13-வது முறையாக காட்பாடியில் களம் காண்கிறார் துரைமுருகன்.
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆயிரக்கணக்கானருடன் ஊர்வலமாக சென்று தாக்கல் செய்தார்.
  • கடலூர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு முன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் வேட்பு மனுவை வைத்து பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
  • விருதுநகரில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்.

இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியுள்ளது. எனவே கூட்ட நெரிசலை சமாளிக்க ‘டோக்கன்’ நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வேட்புமனுக்கள் முடிந்தவுடன் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படும். உரிய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மனுக்கள் ஏற்கப்பட் டும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் மனுக்களை திரும்ப பெறுவதற்கு 9-ந்தேதி கடை சிநாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *