விளையாட்டால் நேர்ந்த விபரீதம்… 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்!

மரியா எடுவார்டா என்ற உடற்கல்வி பட்டதாரிப் பெண், பிரேசிலின் சா பாவ்லோவில் உள்ள Skeleton Bridge என்ற இடத்துக்கு Bungee Jump எனப்படும் சாகச விளையாட்டில் அவர் ஈடுபட முயன்றுள்ளார். அங்கிருந்த பயிற்சியாளர்கள் இளம்பெண் மரியா எடுவார்டாவை 40 மீட்டர் உயரத்தில் இருந்து தூக்கி வீசினர்.

அப்போதுதான், அவர்கள் பாதுகாப்புக்கான கயிறை மரியா உடலில் கட்டாதது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தரையில் மோதி சம்பவ இடத்திலேயே மரியா உயிரிழந்தார். மேலும் இதை நேரில் பார்த்த மரியாவின் வருங்கால கணவர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.

இந்த விபத்து நடப்பதற்குச் சற்று முன்பாகவே மரியா அந்த சாகசப் பகுதியிலிருந்து சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். மேலும், பாலத்தில் இருந்து கீழே குதிக்க எனக்கு அனுமதி கொடுத்த அந்த லூசு யாரு? என்று அவர் நகைச்சுவையாக ஒரு கேள்வியையும் எழுதியிருந்தார். மரியா தற்போது உயிரிழந்த நிலையில் அவர் பகிர்ந்த இந்த கடைசிப் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *