நடிக்க முடியாமல் போன சாய் பல்லவி ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படமே தேர்ந்தெடுத்த சமந்தா!

சமந்தா லீட் ரோலில் நடித்து நந்தினி ரெட்டி இயக்கியுள்ள படம் ‘மா இண்டி பங்காரம்’. இப்படத்தை சடமந்தாவே தனது தயாரிப்பு நிறுவனமான ‘டிராலலா’ (Tralala) மூலம் தயாரித்துள்ளார்.


பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் ‘டிராலலா’ நிறுவனத்தின் முதல் முயற்சிகளில் ஒன்றாக ‘மா இண்டி பங்காரம்’ உருவானது என சமந்தா கூறுகிறார்.இப்படம் ஜூன் 19-ம் தேதி வெளியாகிறது.


இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்வுகளிலும் சமந்தா பங்கேற்று வருகிறார்.
மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளித்து ஆக்ட்டிவாக இருந்து வந்தவர், ரசிகர்களிடம் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


“‘மா இண்டி பங்காரம்’ படத்தின் கதையை முதலில் நடிகை சாய் பல்லவியை மனதில் வைத்துதான் உருவாக்கினோம். ஆனால், சாய் பல்லவி அப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், அவருக்கு இதற்கான நேரம் கிடைக்கவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திரைப்படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை;
இந்தத் திரைப்படம்தான் என்னைத் தேர்ந்தெடுத்தது,” எனக் கூறியிருக்கிறார்.

இந்தப் பதிவை பார்த்த நடிகை சாய் பல்லவியும் அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, “‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் உங்களை வந்தடைய வேண்டும் என இருந்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *