கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான சேவைகள் பாதிப்பு
டெல்லி:
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 20) 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிமூட்டம் காரணமாக 88 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 89 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகாலை மற்றும் காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கி, மாற்று ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்துள்ளன.
பனிமூட்டம் தொடரும் வாய்ப்பு இருப்பதால், பயணிகள் தங்களது விமான நிலவரத்தை முன்பே சரிபார்த்து விமான நிலையம் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

