அட்லீயை இம்ப்ரஸ் செய்த சாய் அபயங்கர் | “100 முறைக்கு மேல் கேட்டேன்” – அட்லீ!

அட்லீயை இம்ப்ரஸ் செய்த சாய் அபயங்கர்

தமிழ் இசை உலகில் Music Video மூலம் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் 6-வது Music Video ‘ரதிமா’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் இப்பாடலின் இசை, காட்சியமைப்பு மற்றும் நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இயக்குநர் அட்லீ ‘ரதிமா’ பாடலை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

‘ரதிமா’ பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ள அட்லீ, பாடல் வெளியானது முதல் இதுவரை 100 முறைக்கும் மேல் கேட்டுவிட்டதாக தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதாகவும், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் பாடல் தன்னை கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சாய் அபயங்கரை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ள அட்லீ, ஒவ்வொரு புதிய படைப்பிலும் அவர் தன்னைத்தானே மிஞ்சும் வகையில் செயல்பட்டு வருவதாகப் பாராட்டியுள்ளார். அவரது இசையமைக்கும் திறமை மற்றும் பாடல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

தான் சாய் அபயங்கரின் தீவிர ரசிகர் என்றும், அவரது அடுத்த பாடலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள அட்லீ, அவர் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ‘ரதிமா’ பாடலின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாக நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸேவின் நடனம் அமைந்துள்ளது. இசைக்கு ஏற்ற அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், அவரது நடிப்பு மற்றும் நடனத்தையும் அட்லீ பாராட்டியுள்ளார்.

மேலும், பாடலின் ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் காட்சிகளின் மூலம் கதையை நகர்த்திய விதத்திற்காகவும் படக்குழுவினருக்கு அட்லீ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *