LJKவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர், பாஜக தெற்கு பூத் தலைவர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை அதிகாரப்பூர்வமாக LJK கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, LJK கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் விளக்கமளித்தார். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள்சேவைக்கும் புதிய உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர், LJK கட்சியின் நோக்கங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இணைந்ததாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

