லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் கொடி ஏற்றி தொடக்கம்
புதுச்சேரி:
புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) அதிகாரப்பூர்வ கொடி இன்று பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைவர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கட்சி கொடியை ஏற்றி வைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார்.
நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொடியில், கையில் வேலுடன் சிங்க முத்திரை இடம்பெற்றுள்ளது. மேலும், கொடியில் ஆறு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் சின்னமாக LJK என்ற எழுத்தும் பதிக்கப்பட்டுள்ளது.
வலிமை, தைரியம், நீதிநிலை மற்றும் மக்கள் பாதுகாப்பை குறிக்கும் வகையில் சிங்கச் சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சியின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி அறிமுகம் புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய கவனத்தை பெற்றுள்ள நிலையில், வருங்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

