LJK தலைவர் உடன் மீனவர் கூட்டமைப்பினர் சந்திப்பு

லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி ஏற்பாட்டில், புதுச்சேரி அனைத்து மீனவர் கூட்மைப்பினர் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகள் கனகசபை, முனைவர் பெரியாண்டி, சந்திரன், சுப்பிரமணியன், உள்ளிட்ட நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது, மீனவர் சமூகத்தின் கல்வி, வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பல முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அவை வருமாறு:
மீனவர் சமூகத்தினருக்கான EBC இடஒதுக்கீட்டை தற்போதைய 2% இலிருந்து 10% ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி (Research) கல்வி வரை மீனவர் மாணவர்களுக்கு முழுமையான இலவச கல்வி வழங்க வேண்டும்.

கூட்டுறவு சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலில் ஆபத்தில் சிக்குகிற மீனவர்களை காப்பாற்ற உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மீனவர்களுக்கு முழுமையான காப்பீட்டு திட்டம் (Insurance Scheme) அமல்படுத்த வேண்டும்.

மீனவர்களுக்கு பல்வேறு வாரியங்களில் (Boards) உரிய பதவி வழங்க வேண்டும்.

சட்டமன்றத்தில் மீனவர் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

முதிய மீனவர்களுக்கு மீனவர் பென்ஷன் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

எரிபொருள் கூடம் (Fuel Depot) அமைக்க வேண்டும்.

சிறு தொழில் செய்து வரும் மீனவர்களுக்கும் டீசலை உற்பத்தி (Production) விலையில் வழங்க வேண்டும்.

என மீனவர் கூட்டமைப்பு சார்பில், இந்த கோரிக்கைகள் அனைத்தும் மீனவர் சமூகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் அத்தியாவசியமானவை என தெரிவிக்கப்பட்டது.
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், இந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, உரிய நிலைகளில் எடுத்துச் சென்று பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *