ராஜா முத்துப்பாண்டி சாதனைக்கு முதல்வர் பாராட்டு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது இந்தச் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ₹30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். மேலும் பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *