நடிகர் விஜய் பற்றி பகிர்ந்த அனிருத் | நடிகர் விஜய் | அனிருத் ரவிச்சந்தர் | ஜனநாயகன்

தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத், இவரின் இசையில் பல கமர்சியல் பாடல்கள் ஹிட் அடித்துள்ளதுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!

இவருடனான பல நடிகர்களின் வெற்றிக்கரமான கூட்டணி அமைந்துள்ளது. அதிலும் நடிகர் விஜய் மற்றும் அனிருத் உடனான கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையாகாது!

இந்நிலையில்தான் அனிருத், முதல்வர் விஜய்யுடன் பயணித்த தருணங்கள் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ மற்றும் ஜனநாயகன் ஆகிய திரைப்படங்களில் உங்களுடன் பயணித்தது உணர்வுபூர்வமான பயணம். அதுமட்டுமல்லாமல் தன்மீது நம்பிக்கையை வைத்ததற்கும், பேணிக்காக்கும் நினைவுகளும் நன்றி.” என்ற அனிருத்தின் இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *