AK-வை கண்டதும் மாறிய விஜயின் Reaction! சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய், இன்று பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் சந்தித்துக்கொண்ட காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் மிஷெலின் லீ மான்ஸ் கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். போட்டி நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்தபோது, அவரை வரவேற்க அஜித்குமார் காத்திருந்தார்.
அஜித்தை பார்த்ததும் விஜய் உற்சாகமாக ஓடிச்சென்று அவரை ஆரத்தழுவிக்கொண்டார். இருவரும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து, போட்டியில் பங்கேற்கும் தனது சக வீரர்களை முதலமைச்சர் விஜய்க்கு அஜித்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த சந்திப்பு அஜித் – விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.
1995ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் இணைந்து நடித்த அஜித் – விஜய், அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்தனர். இருவரது ரசிகர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போட்டி மற்றும் மோதல்கள் இருந்து வந்தாலும், இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்ந்து வெளிப்பட்டு வந்துள்ளது.
திரைப்பயணத்தைத் தாண்டி, விஜயின் அரசியல் பயணத்திலும் அஜித் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் தொடங்கி வைத்ததும், இருவரும் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டதும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
ரசிகர்களின் போட்டியைத் தாண்டி… இரு நண்பர்களின் சந்திப்பு!
சில நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு, அஜித் – விஜய் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு தருணமாக மாறியுள்ளது.

