LJK மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா – திருநங்கை சமூகத்துடன் கொண்டாட்டம்

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அன்னலட்சுமி திருநங்கை சமூகத்துடன் இணைந்து, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் , ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி மாநில மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு, அவர்களுடன் அன்பும் ஒற்றுமையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் போது திருநங்கைகளுக்கு புடவை, மளிகைப் பொருட்கள் மற்றும் காலண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Read More

பாதுகாப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களிலும், மழை பாதிப்பு இல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில்…

Read More

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது: அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூன்று நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஜனவரி 16-ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சென்னையில் மர்மமாக சாகும் காகங்கள் – பீதியில் மக்கள்

சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. வானில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதால் பூங்காவிற்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பூங்கா காவலாளி குட்டி கூறுகையில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே காகங்கள் விழுந்து இறக்கத் தொடங்கியதாகவும், தினந்தோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் . தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

Read More

ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு மேற்பார்வையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 15ஆம் தேதி நடைபெறவிருந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம நிர்வாகம் நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை தனிநபர்கள் அல்லது உள்ளூர் குழுக்கள் நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகுகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு, அரசே நேரடியாக பொறுப்பேற்று போட்டிகளை நடத்துவது சிறந்தது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அணிவகுப்பு, அவனியாபுரம், பாலமேடு மற்றும்…

Read More

சென்னை விமான நிலையத்தில் விரைவில் ஸ்மார்ட் ட்ராலிகள்

சென்னை விமான நிலையம் இனி ஸ்மார்ட் ட்ராலிகளுடன் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி, பயணிகளுக்கு விமான நிலையத்திற்குள் கடைகளில் ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் சாப்பிடவும் உதவும். இந்த ஸ்மார்ட் ட்ராலிகள் , பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் . இவை சிறிய, தொழில்நுட்பம் நிறைந்த வண்டிகள். இவற்றில் ஒரு திரை பொருத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை இந்த திரையில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்தவுடன், விமானம்…

Read More

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க புதிய முறை அமல்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பயணிகள் எதிர்கொள்ளும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க, தானியங்கி கட்டண வசூல் (AFC) கேட்கள் மற்றும் கூடுதல் கட்டண வசூல் கவுண்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலும் விரைவில் கூடுதல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. தியாகராய கல்லூரி மெட்ரோ ரயில்…

Read More

தமிழகத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்க உள்ளார். அதன் பின்பு மற்ற பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் அணைத்து வீடுகளுக்கும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Read More

PAN-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள் – வருமான வரித் துறை எச்சரிக்கை

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதுவரை PAN-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி ஆதார் எண்ணை PAN எண்ணுடன் இணைக்க வேண்டும் என வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் PAN-ஆதார் இணைப்பை செய்யத் தவறினால், PAN எண் செல்லாது (Inactive) என அறிவிக்கப்படும் என்றும், இதனால் வருமான வரி தொடர்பான சேவைகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட…

Read More

புத்தாண்டு கொண்டாட்டம் முன்னிட்டு சென்னையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் – காவல்துறை அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். மேலும், அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள்…

Read More

9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி வந்த சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்….

Read More

தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு – அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், கைது செய்ய மறுத்து சாலையில் வாகனங்களின் அடியில் படுத்து உருண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்….

Read More

Recap of 2025: அரசியல் மாற்றங்கள், பேரிடர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – இந்தியாவையும் உலகையும் உலுக்கிய ஆண்டு

2025 ஆண்டு இந்தியாவுக்கும் உலகுக்கும் பல்வேறு வகையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அரசியல் களத்தில் புதிய கட்சிகள், அதிர்ச்சியூட்டிய குற்றச் சம்பவங்கள், இயற்கை பேரிடர்கள், பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் என பல நிகழ்வுகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல்: புதிய கட்சிகள், புதிய அரசியல் போக்கு 2025 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலக நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக களமிறங்கி, புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது அரசியல் பயணம் தமிழக…

Read More

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2.22 கோடி குடும்பங்கள் பயன்

தமிழகத்தில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக மொத்தமாக 22,291 டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், பொங்கல் வேட்டி மற்றும் சேலை கொள்முதல் பணிகள் 85…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் கடும் சரிவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.3,360 குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.420 குறைந்து, இன்று ரூ.12,600 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் குறைவு, நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.23 குறைந்து, இன்று ரூ.258க்கு…

Read More

ஒரு சிகரெட் ரூ.72 உயர்வு.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலால் சட்டத்திருத்தத்தால், புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக, தற்போது ரூ.18க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மெல்லும் புகையிலைக்கு விதிக்கப்படும் வரியும் தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக…

Read More

கரூர் விஜய் பிரச்சார கூட்டம் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை

கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக, த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் சிபிஐ அதிகாரிகள் டெல்லி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள்…

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் தேர்தல்களை முன்னிட்டு, தகுதி பெற்ற புதிய வாக்காளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மற்றும் நேரடி முறைகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் படிவங்கள் சரியாக பெறப்படாதது மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் படிவம் கொடுப்பதில் குழப்பங்கள் நீடிப்பதால்,…

Read More

மீண்டும் கீழடி அகழாய்வு: 11-ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற உள்ள 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்திய முக்கியமான ஆய்வு தளமாக கீழடி கருதப்படுகிறது. இதற்கு முன் நடைபெற்ற அகழாய்வுகளில், நகர்ப்புற திட்டமிடல், சுடுமண் பாத்திரங்கள், கட்டிட அமைப்புகள், எழுத்துச் சான்றுகள் உள்ளிட்ட பல முக்கியமான தொல்லியல் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சங்ககால தமிழர் நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தற்போது ஜனவரி…

Read More

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது கைது – ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் கைது நடவடிக்கைகள்…

Read More

கேப்டன் விஜயகாந்த்: திரையுலகிலிருந்து அரசியல் வரை – ஒரு போராளியின் பயணம்

தமிழ் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் தனித்துவமான முத்திரை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர், அரசியல்வாதி, மக்கள் தலைவன் என பல அடையாளங்களுடன் வாழ்ந்த அவரது வாழ்க்கை, எளிய மக்களின் நம்பிக்கையாகவும் போராட்டக் குரலாகவும் அமைந்தது. 1952 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்த், ஆரம்பத்தில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். 1979ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், 1980–90களில் ஆக்‌ஷன் ஹீரோவாக…

Read More

புது வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கெளர்!

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பதிவு செய்துள்ளார். கேப்டனாக அவர் தலைமையில் இந்திய மகளிர் அணி 77 வெற்றிகளை பெற்றுள்ளதன் மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கெளர் கைப்பற்றியுள்ளார். இதுவரை இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் வைத்திருந்தார். அவர் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 76 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. தற்போது…

Read More

போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது.

தமிழக அரசு பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு வகை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு வகை ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஒருநாள் வித்தியாசத்தால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமையை நீக்கி, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட…

Read More

ஜனவரி 20ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2026ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடராக நடைபெறும் இந்த சட்டப்பேரவை அமர்வில், முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.1,03,120-க்கு விற்பனை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.12,890-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது தங்க விலையில் ஏற்பட்ட இந்த உயர்வு, நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.254-க்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க…

Read More

இடியாப்பம் விற்பனைக்கு இனி உரிமம் கட்டாயம்

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள், இனி உரிய உரிமம் பெற்ற பின்னரே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. உணவின் தரம் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெறலாம் எனவும் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெறப்படும் உரிமம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள்…

Read More

LJKவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர், பாஜக தெற்கு பூத் தலைவர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை அதிகாரப்பூர்வமாக LJK கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, LJK கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் விளக்கமளித்தார். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள்சேவைக்கும் புதிய உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு

சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம், நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்

சென்னை / கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சேக் முகமத், பாதுகாப்பு பணிக்காக சென்னைக்கு சென்று விட்டு, கடந்த சனிக்கிழமை சென்னை-கோவை இன்டர்சிட்டி ரயிலில் கோவைக்கு திரும்பியுள்ளார். அதே ரயிலில், சென்னையில் சட்டக்கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி பயணம் செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, மாணவியின்…

Read More

MGR | எம்ஜிஆர் நினைவு தினம்: மெரினாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், அவரது கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட…

Read More

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி, அவரது புகழுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார். சமூக சீர்திருத்தம், சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கொள்கைகளால் தமிழ்சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும்…

Read More

போலி மருந்து விவகாரத்தில் அதிகாரிகள் அதிரடி: முன்னாள் IFS அதிகாரி கைது

ஓசூர்: போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்ததாக தொடர்புடைய வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தியை, ஓசூர் அருகே CBCID போலீசார் கைது செய்துள்ளனர். போலி மருந்து விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில், GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா என்பவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தொடர்புடைய ஆவணங்கள்,…

Read More

சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் கிராம் விலை ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,800க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்வடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.244க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

கூடுவாஞ்சேரியில் போராட்டம்: செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது – போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம்

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற போராட்டக் களத்திற்கு வந்த செவிலியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை முறையில் போராட்டம் நடத்த வந்த செவிலியர்கள் மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது நடவடிக்கையின் போது, கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் போலீசார் நடந்துகொண்டதாக செவிலியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். மனிதாபிமானம் இல்லாத இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அமைதியான முறையில் போராடும் தங்களை இப்படித்தான்…

Read More

கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

நெல்லையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய கருத்துகளை முன்வைத்தார். தமிழர் நாகரிகத்தின் தொன்மையும், அதன் பண்பாட்டு மரபுகளும் உலகிற்கு வெளிப்படும் வகையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகங்களை பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கீழடி அகழாய்வு, தமிழர் நாகரிகம் சங்க காலத்திற்கு முன்பே…

Read More

சென்னையில் 49-வது புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் YMCA திடலில்

சென்னை:சென்னையில் நடைபெற உள்ள 49-வது புத்தகக் கண்காட்சி, நந்தனம் YMCA திடலில் ஜனவரி 8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தக ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சி, தினசரி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலான நூல்கள், கல்வி, இலக்கியம், குழந்தைகள்…

Read More

நெல்லை ரெட்டியார்பட்டியில் அருங்காட்சியகம்: இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொற்கொடை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) திறந்துவைக்கிறார். 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பொற்கொடை அருங்காட்சியகம், ரூ.56.36 கோடி செலவில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொற்கொடைப் பொருட்கள், தொன்மையான வரலாற்றுச் சான்றுகள் மற்றும் கலைப் பண்பாட்டு அடையாளங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம்,…

Read More

வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ‘முகவரி இல்லாதவர்கள்’ எண்ணிக்கை கவலைக்கிடம்: ப.சிதம்பரம்

சென்னை:தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 26,32,672 பேர் இறந்தவர்கள் என்றும், 3,39,278 பேர் இரட்டைப் பதிவுகள் கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார். இந்த இரு காரணங்களையும் ஒரு அளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். ஆனால், 66,44,881 பேர் ‘முகவரி இல்லாதவர்கள்’ எனக் கூறி நீக்கப்பட்டிருப்பது தான் பெரும் நெருடலாக உள்ளது என…

Read More

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்ப்பில் புதிய கட்டுப்பாடுகள்

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த முடிவு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் இந்த இரண்டு இன நாய்களையும் புதியதாக வாங்கி வளர்ப்பது அனுமதிக்கப்படாது. இந்த தடையை மீறி பிட்புல் அல்லது ராட்வீலர் இன நாய்களை புதிதாக வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.1 லட்சம்…

Read More

இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்: பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?

SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் (EPIC) அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை…

Read More

பாதியிலே நிறுத்தப்பட்ட அரசு வீடுகள்: நரிக்குறவர் சமூக மக்கள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பழங்குடி சமூக மக்களுக்கு, தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும், இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயனாளிகள் நீண்ட காலமாக வீடுகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வட்டாட்சியர் உள்ளிட்ட…

Read More

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சம்பவம்: அண்ணாமலை வருத்தம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அண்ணாமலை, இவ்விவகாரத்தில் நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். சம்பவம் தொடர்பாக உண்மை நிலவரம் வெளிவரும் வரை அனைவரும் அமைதியும் பொறுமையும் காக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த துயரச்…

Read More

விஜய் மக்கள் சந்திப்பு: காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்

ஈரோடு: த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்வை தடுப்புகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரசார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கும் பிரசார வாகனத்திற்கும் குறைந்தபட்சம் 50 அடி இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் திடலில், தெளிவாக…

Read More

இன்று தங்கம் விலையில் சிறிய சரிவு: சவரன் ரூ.98,800

சென்னை: தங்கம் விலையில் இன்று சற்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4 குறைந்து ரூ.211-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு…

Read More

அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.

சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிகாரிகளின் இல்லங்களில் நியமிக்கப்பட்டு தனிப்பணிகளை மேற்கொண்டு வந்த காவலர்கள், தங்களது முதன்மை காவல் பொறுப்புகளுக்கு மீண்டும் மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த முக்கிய பணிகளில் காவல் துறையின் மனிதவளத்தைச்…

Read More

ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு அனுமதி கோரியபோது, போலீஸ் துறை சார்பில் 84 கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கான விளக்கங்கள்…

Read More

வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக வந்த ஒரு ஆட்டோவை அவர் நிறுத்த முயன்றார். ஆட்டோவை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் வாகனத்தை நிறுத்துவது போல நடித்து, திடீரென பெண் போலீஸை கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள்…

Read More

ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அபாயம் – நகை வாங்குவோர் கவலை

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருவதாக…

Read More

போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:போலி மருந்து விவகாரத்தில் எத்தனை SIT குழுக்கள் அமைத்தாலும், முழுமையான வெளிப்படைத்தன்மை கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் புதுச்சேரி குறித்து புரிதல் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் என விமர்சனம் செய்தார். புதுச்சேரியைப் பற்றி தெளிவான புரிதல் இல்லாத நிலையில், அவருடன் கூட்டணி குறித்து அவசரமாக முடிவு எடுக்க…

Read More

மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரலாற்று பெருமை மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த பெயரிடல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மேலமடை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை சீர்செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் இந்த சாலையில்…

Read More

ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்திற்கு பறக்கும் நடுவே வெடிகுண்டு இருப்பதாக அறியப்பட்ட மிரட்டல் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு எச்சரிக்கை செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அவசர நடவடிக்கை எடுத்தது. ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுவதும் பாதுகாப்பு படையினரால் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டு எதுவும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்….

Read More

சென்னை விமானநிலையத்தில் இருந்து IndiGo விமான சேவை மீண்டும் தொடங்கியது !

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் IndiGo விமான சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. விமான சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியதால் , பல பயணிகள் தங்கள் பயணத்துக்கு சென்று சேரும் ஆவலுடன் இருந்தனர். அந்த நிலையில், சேவை நடமாட்டம் பல பயணிகளுக்கு சற்று நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அனைத்து விமானங்களும் செயலிழக்கவில்லை; இன்றைய தினத்தில் மட்டும் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் சிலர், “இடையூறு ஏற்பட்டாலும்…

Read More

சென்னையில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் பயணிகள் அவதி : சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றம்

சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில், திடீரென பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதியை எதிர்கொண்டனர். இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவம், குறிப்பாக பணிக்காக பயணம் செய்தவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. மெட்ரோ ரயில் திடீரென நின்றதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் சுரங்கப் பாதை பகுதியில் இருந்தபோது கோளாறு ஏற்பட்டதால், ரயிலின் கதவுகள் திறக்காமல் பயணிகள் சில…

Read More

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இலங்கையில் இரண்டு நாட்கள் கனமழை பொழிந்தது. இதனால் அந்நாட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன. இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்திய புயல் பின்னர் தமிழக கடலோரங்களை நோக்கி நகர்ந்தது. அதன் விளைவாக 28-ந்தேதி முதல் தென் தமிழக மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடையறாத கனமழை பெய்தது. மணிக்கு 55 முதல் 75 கிலோமீட்டர்…

Read More

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் ரூ.94,400-ஐ எட்டியது!

சென்னை:சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கமாக, தங்கம் விலை நாட்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற-இறக்க நிலையை சந்தித்து வருகின்றன. நவம்பர் 24-ஆம் தேதி சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,520 எனவும், சவரன் ரூ.92,160 எனவும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.171 ஆக இருந்தது. அதன்பிறகு, நவம்பர் 25-ஆம் தேதி தங்கம் விலையில் திடீர் உயர்வு…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்

அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும், அதன் பின் தொடர்ந்து எட்டு முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக ஆட்சி காலங்களில் வனத்துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்தாலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி…

Read More

த.வெ.க வில் இணையும் செங்கோட்டையன் ?

அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அலுவலகத்துக்கு வர உள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது. அவர் நவம்பர் 26 அல்லது 27 ஆம் தேதிகளில் விஜயம் செய்யக்கூடும் என நம்பப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் எங்கு அரசியல் முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில், த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அவர்…

Read More

Gen Z இளைஞர்கள் அமைதியானவர்கள் அல்ல; மாற்றத்தை உருவாக்கப் போகும் சக்தி அவர்களே – த.வெ.க தலைவர் விஜய்

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி, இன்றைய Gen Z இளைஞர்கள் தமிழக அரசியலை வடிவமைக்கும் முக்கிய சக்தி உள்ளவர்கள் என்று கூறியுள்ளார் . கூட்டத்தில் மக்கள் பங்கேற்று உற்சாகக் குரல்களில் அவரை வரவேற்றனர். Gen Z kids தற்குறிகள் அல்ல, ஆச்சரிய குறி. உங்கள் அரசியலை மாற்றப் போகும் ஆச்சரிய குறி அவர்கள்தான், என்று விஜய் உரையின் தொடக்கம் முதலே இளைஞர்களை நோக்கி திறம்படப்…

Read More

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் : இலக்கிய உலகில் துயரச்செய்தி

புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப் பேச்சு என பல்வேறு துறைகளில் அழியாத தடம் பதித்திருந்தார். “வணக்கம் வள்ளுவ”நாடகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், மரபுக் கவிதை முதல் புதுக்கவிதை வரை பல வடிவங்களில் ஆழமான படைப்புகளை வழங்கியவர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், மனிதநேயப் பார்வை, பெண்கள் உரிமை, சமத்துவம் போன்ற கருத்துக்களை தன்னுடைய…

Read More

திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அன்புமணி கண்டனம்

சென்னை: சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிராங்காடு கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கண்டித்துள்ளார். ராஜேந்திரன் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தார். ராஜேந்திரன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கிடையே நில சம்பந்தப்பட்ட…

Read More

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: கோவை – மதுரை மெட்ரோ திட்டங்களை மீள் பரிசீலனை செய்ய பிரதமருக்கு வேண்டுகோள்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நகரப் போக்குவரத்து வளர்ச்சியில் கோவை மற்றும் மதுரை முக்கிய நகரங்களாகும். இந்நகரங்களில் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் சேவை மிக அவசியமானதாக தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு,…

Read More

ராமேசுவரம் அதிர்ச்சி: ஒருதலைக் காதல் கொடூரமாக முடிந்தது

ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய மீனவர் முனியராஜ் 21 (வயது) கைது செய்யப்பட்ட பின்னர், அவர் அளித்த வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி 17 (வயது) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முனியராஜ் சில மாதங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து…

Read More

SIR படிவத்துடன் எந்த ஆவணங்களும் சேர்க்கத் தேவையில்லை” – தேர்தல் ஆணையம் மீண்டும் தெளிவுபடுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படும் SIR | எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது, குடிமக்களிடம் எந்த வகையான ஆதார ஆவணங்களையும் கேட்க தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுபடியும் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், இம்மாதம் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, அவற்றை நிரப்பி பெறும் பணியில் வாக்குச்சாவடி…

Read More

2048-ல் சென்னை முழுமையாக மாறும்… விரிவான போக்குவரத்து திட்டம் வெளியீடு

சென்னை நகரம் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 2048 வரை நகரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) விரிவான போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan – CMP) ஒன்றை உருவாக்கி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மெட்ரோ – LRT – RRTS: சென்னைக்கு புதிய போக்குவரத்து வலையமைப்பு புதிய CMP திட்டம், சென்னையின் தினசரி பயணத்தை எளிதாக்க பல்வேறு…

Read More

தமிழ்: தொன்மையும் உலகளாவிய பெருமையும் தாங்கும் மொழி

முன்னுரை  கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும். மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்திலேயே உருவெடுத்து, ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உயிரோடு வளர்ந்து வரும் மொழி “அது தமிழ்”. தமிழரின் பண்பாடு என்றல் சங்க புலவர் கணியன் பூங்குன்றனார் கூற்றுப்படி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஆகும். அதாவது எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்று…

Read More

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானம் அவசர தரையிறக்கம்

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அம்மா சத்திரம் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் திடீரென அவசரமாக தரையிறங்கியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், முன்பக்க இறக்கை உடைந்ததாலும், எரிபொருள் லீக் ஆனதாலும் பைலட் அவசரமாக விமானத்தை நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பைலட் – பயிற்சி பெறுபவர் இருவரும் பாதுகாப்பாக மீட்பு விமானம் தரையிறங்கிய உடனே அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து…

Read More

பராமரிப்பு பணி: சென்னையின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி மதியம் 2 மணிக்குள் முடிந்தால், மின் விநியோகம் அதற்கு முன்னரே மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருமுல்லைவாயல், லட்சுமிபுரம், பெரியார்நகர், கோனிமேடு, கங்கைநகர், சரத்கண்டிகை,…

Read More

தகாத உறவு தகராறில் பெண்ணை வெட்டிய இளைஞர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியில் தகாத உறவை மையமாகக் கொண்ட தகராறில் பெண்ணை வெட்டி காயப்படுத்திய இளைஞர், பின்னர் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொழுவைச் சேர்ந்த சித்ரா (36) என்பவர், 2020 ஆம் ஆண்டு கணவர் ஜான்சன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதன் போது அருகில் வசிக்கும் மெக்கானிக் கருப்பண்ணன் என்பவருடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த இந்த உறவில் அடிக்கடி…

Read More

மழைநீர் வடிகால் பணிகள்: சரியாக மூடப்படாத சாலைகளால் மக்கள் அவதி

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக பல சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அவை முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதை சரிசெய்ய மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் நகரின் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் சரிவர சீரமைக்கப்படாமல் இருப்பது போக்குவரத்துக்கும், நடைபாதை…

Read More

மதுரையில் வைகை ஆற்றில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

மதுரை:மதுரை சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரவை அருகே சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது இரண்டாவது மகன் சந்தோஷ் (18) கல்லூரி மாணவர் ஆவார். அவர் தந்தையுடன் சேர்ந்து டாடா ஏஸ் வாகனத்தை கழுவுவதற்காக வைகை ஆற்றிற்கு சென்றிருந்தார். வாகனத்தை கழுவிய பிறகு, சந்தோஷ் தனியாக ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் “நீரின் ஓட்டம்…

Read More

தஞ்சையில் குருவை நெல் கொள்முதல் உற்சாகமாக நடைபெற்று வருகிறது!

தஞ்சை மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி கொள்முதல் பருவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 352 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அதில் 291 நிலையங்கள் செயல்பாட்டில் இருந்து, நெல் கொள்முதல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்குவதற்கான தேவையாக 8,06,563 சாக்குகள் இருப்பில் உள்ளன. அதே நேரத்தில், சேமிப்புக்கிடங்குகளில் 12,73,628 சாக்குகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொல்கத்தா சனல் ஆலை வழியாக, மேற்குவங்க…

Read More

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்!

திருப்பூர்:வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தங்களின் வாக்குரிமையைச் செலுத்துவதற்காக விடுமுறை எடுத்த தொழிலாளர்கள், இன்று அதிகாலை முதலே ரயில் நிலையம் நோக்கி திரண்டனர். இதனால் பல்வேறு ரயில் நிலைய நுழைவாயில்கள், பிளாட்ஃபாரங்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.ரயில்களில் இடம்…

Read More

மயிலாடுதுறையில் அதிர்ச்சி! மூதாட்டியின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த தைரியமான செயின் பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள அழகப்பா செட்டித்தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி சுசிலா என்றவர், வழக்கம்போல தெருமுனையிலுள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பி வந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுசிலாவின் பின்னால் நடந்து வந்து, அவர் கழுத்தில் இருந்த 12 சவரன் தங்கச்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

கரூர்: நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது வேலுச்சாமி புரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கிய சிபிஐ, இதுவரை சம்பந்தப்பட்ட பல்வேறு சாட்சிகள் மற்றும் நிகழ்வில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர்…

Read More

TNPSC Group 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்முறை குரூப் 4 தேர்வில் மொத்தம் 3,985 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. தமிழக அரசுத் துறைகளில் அதிகபட்ச பணியிடங்களை நிரப்பும் தேர்வாகக் கருதப்படும் குரூப் 4 தேர்வுக்கு, வழக்கம்போல் இந்த முறைவும் பெருமளவில் விண்ணப்பங்கள் வந்தன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித் தகுதியாக இருப்பதால், பல்வேறு…

Read More

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி: இனி வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே வால்பாறைக்கும் இனி இ-பாஸ் கட்டாயம் என்ற அதிரடி உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாக வால்பாறை சுற்றுலாத் தலத்தில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகின்றது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பதற்காக சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு…

Read More

தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை இன்று தாறுமாறாக வீழ்ச்சி – நகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி! கடந்த சில நாட்களில் சவரனுக்கு ரூ.97 ஆயிரத்திலிருந்து ரூ.88 ஆயிரமாக சரிவு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பண்டிகைக்குப் பிறகு விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 23-ந்தேதி சவரன் ரூ.92 ஆயிரமாக இருந்தது. அடுத்த நாள் (24-ந்தேதி) ரூ.91,200 ஆகக் குறைந்தது. 25 மற்றும் 26-ந்தேதிகளில் மீண்டும் சற்று உயர்ந்து ரூ.92 ஆயிரத்தில்…

Read More

குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து, பல பகுதிகளில் அவதி உண்டாக்கியது. வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வழங்கியுள்ளது. கோவையிலிருந்து மானந்தவாடி நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா அரசு பேருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி பகுதியில் பாறை விழுந்ததில் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த 48 பயணிகள் யாரும் காயமின்றி உயிர் தப்பினர். மாற்று பேருந்து மூலம் பயணிகள் பாதுகாப்பாக…

Read More

மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில், புதிய மின் கம்பம் அமைப்பதற்கு பதிலாக மின்துறை ஊழியர்கள் மரக் குச்சிகளை வைத்து மின் கம்பங்களுக்கு முட்டுக் கொடுத்து இணைத்துள்ளனர். உலகமே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு மரக் குச்சிகளை மின் கம்பங்களுக்கு மாற்றாக பயன்படுத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே…

Read More

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி செல்லும் 1C எண் அரசு பேருந்து மாலை 6.10 மணியளவில் புறப்பட்டது. இதில் நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் (46) கண்டக்டராக பணியாற்றி வந்தார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது படியில் நின்ற மாணவர்களை மேலே ஏறச் சொன்ன முனியப்பனின் பேச்சைக் கேட்காமல் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர்,…

Read More

கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக உயிரிழந்தது. சமீப காலமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கோத்தகிரி – அல்லமலை கிராமம் செல்லும் நடைபாதையில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. இன்று…

Read More

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்பியது. நீதிமன்றம், சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்லலாமா என  கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது எனக் கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், அரசு அலுவலகத்தில் சோதனை நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவா? என்று கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வாதம், விசாரணை அதிகாரி தவறு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் அவரை…

Read More

கூடலூரில் அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை!

கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்கிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கூடலூரிலிருந்து தேவலா வழியாக அரசு பேருந்து கரியமலை பகுதியை நோக்கி சென்றபோது, வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானை, தனது குட்டியை பாதுகாக்கும் நோக்கில் பேருந்தை தாக்க முயன்றது. பயணிகள் ஹார்ன் ஒலியை கேட்டு ஓட்டுனர்…

Read More

சீர்காழியில் வேல் வடிவ ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மண்டலத்தில், புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை மற்றும் ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களை கொண்டு சிறப்பு…

Read More

விற்பனைக்கு வைத்த 5 கிலோ கஞ்சா – மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தம் பகுதியில் விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா மீதான நடவடிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கஞ்சா வழக்கு குற்றவாளி மதியார்…

Read More

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது வாலிபர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 21 வயது கவியரசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளியை “பாலியல் குற்றவாளி” என கருதி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்….

Read More

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்!

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.கே. மணி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக இருந்து வரும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுமாறு கோரி சட்டமன்ற பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தில் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக, மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடா’வாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்திற்குப் பிறகு வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களை…

Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தரம், உற்பத்தி முறை, பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை குறித்து துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வழக்கில், மருந்து தயாரித்த ஸ்ரீசன் நிறுவனம் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது….

Read More

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக  அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரப் பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் பிரச்சாரப் பயணத்தை  தொடங்கினார். மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே நடைபெற்றது . தொடக்கவிழாவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல். முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்…

Read More

கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது தோட்டத் தொழிலாளி அசலா என்பவரின் வீடு யானையால் இடிக்கப்பட்டது. வீடு இடிக்கும் சத்தத்தை கேட்டு அசலா தனது ஆறு வயது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றார். அப்போது காட்டு யானை இருவரையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர்…

Read More

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர்  நடராஜன்

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள நாளந்தா இண்டர்நேஷனல் பள்ளியில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் பிக்கிள் பால் மைதானத்தில் போட்டிகளை துவக்கினார். நடராஜன், மாணவர்களிடம் பேசிய பேச்சில், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, தேர்ந்தெடுக்கும் துறையில் மனமார்ந்த பற்று மிக முக்கியம் என தெரிவித்தார். “நான் இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகளை சந்தித்துவிட்டேன். இருப்பினும்,…

Read More

கல்லூரியில் பேராசிரியரை தாக்கிய 5 மாணவர்கள் கைது 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஐந்து மாணவர்கள், ஒரு பேராசிரியரை தாக்கியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். கல்லூரியில் கல்விச் சுற்றுலா நிகழ்வில், மாணவிகள் ஒருவர் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக கூறி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின் சேக் முகமது மைதீன், வசந்த் ஸ்ரீதரன், சுஜின், முத்துராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் கல்லூரிக்குள் புகுந்து…

Read More

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை…

சாதியை சட்டம் மூலம் ஒழிக்க முயற்சி வேண்டாம்; சமூகநீதி வழியே சமத்துவத்தை உருவாக்க நடவடிக்கை எடுங்கள். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சமூகநீதியை முன்னிறுத்தாமல் சாதி ஒழிப்பு ஏற்பட முடியாது என கோரிக்கை விடுத்துள்ளார். கொள்கை அறிவிப்புகளாக அல்லது தெரு பெயர்கள் மாற்றம் போன்ற நாடகமாதிரியாகக் காரியங்கள் நடத்துவதை அவர் கண்டித்தார்; சாதியை நீக்குவதற்கு உண்மையான தீர்வு சமத்துவம் உருவாக்கும் நீடிக்கமான செயல்திட்டங்கள் என்று தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை உயர்த்தும் விதத்தில் சாதிவாரி மக்கள் தொகை…

Read More

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 குழந்தைகளின் உயிரை பரித்துள்ளது  – சீமான் கண்டனம்

காஞ்சிபுரத்தில் இயங்கும் தனியார் மருந்து நிறுவனம் ஸ்ரீ சான் பார்மாவின் ‘Coldrif’ இருமல் மருந்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவை மீறி சேர்க்கப்பட்டதால் 20 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் பின்னர் நிறுவனர் ரங்கநாதன் கோவிந்தன் மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த 14 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை, மொத்தம் 364 விதிமீறல்கள் இருந்தது என்பது…

Read More

உறுதியானது விஜய்யின் பிரசார இடங்கள்… தடபுடலாக ரெடியாகும் நாமக்கல், கரூர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை…

Read More

பிரசார அட்டவணையில் திடீர் மாற்றம்! – தவெக தலைவர் விஜய் அதிரடி முடிவு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தான் மேற்கொள்ளும் மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசார சுற்றுப்பயண அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை…

Read More

இன்ஸ்டாகிராமிலும் உச்சத்தை தொட்ட தவெக தலைவர்! – அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட தமிழக அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார். இன்றைய கணினி யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு, பொதுமக்களின் அங்கமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. தூங்கி விழிப்பதில் தொடங்கி, தூக்கம் தொலைக்கும் ஒரு கருவியாக மனித வாழ்வை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக சமூக வலைங்களில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள் தொடங்கி எளிய ஜனங்கள் முதற்கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது…

Read More