புதுச்சேரி அரசு மருத்துவமனை – கொசு உற்பத்தி மையமாக மாறியதா? பொதுமக்கள் அதிருப்தி!
புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி சுற்றுப்புறம் தற்போது கொசு உற்பத்தி மையமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள நீர்நிலைத் தொட்டிகள் சரிவர பராமரிக்கப்படாததால், அதில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு பிரச்சாரங்களை பெயரளவில் மட்டுமே மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுமக்களின் கூற்றுப்படி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு…

