மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை

மகளிர் பிரீமியர் லீக் (WPL) T20 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை எதிர்த்து அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற தொடரின் 3-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதிரடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை…

Read More

கிரிக்கெட் உலகில் புதிய உச்சம்: ரோஹித் சர்மாவின் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் இந்த சாதனையை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் வைத்திருந்தார். 328 சிக்ஸர்கள்…

Read More

இலங்கைக்கு எதிரான 5வது டி20 போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி – தொடரை முழுமையாக கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரது சிறப்பான ஆட்டத்துக்காக அவர் ஆட்ட நாயகி விருதைப் பெற்றார். மேலும், தொடரில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம்,…

Read More

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் திறப்பு – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைப்பு

கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மைதானத்தை திறந்து வைத்தார். ஆர்.எஸ்.புரம் பகுதியில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை புல்வெளி (Artificial Turf) உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளை…

Read More

புது வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கெளர்!

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பதிவு செய்துள்ளார். கேப்டனாக அவர் தலைமையில் இந்திய மகளிர் அணி 77 வெற்றிகளை பெற்றுள்ளதன் மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கெளர் கைப்பற்றியுள்ளார். இதுவரை இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் வைத்திருந்தார். அவர் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 76 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. தற்போது…

Read More

Women Premier League | WPL-ல் ஜெமிமா கேப்டன் | சர்வதேச டி20-வில் ஒரே ஓவரில் 5 விக்கெட் சாதனை

WPL: மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் புதிய கேப்டனாக இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை DC அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங், சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டதை தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நியமனம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் எதிர்வரும் சீசனுக்கான தயாரிப்பில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. இந்திய வீராங்கனைக்கு கேப்டன் பொறுப்பு…

Read More

U19 ஆசிய கோப்பை: துபாயில் இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி இன்று துபாயில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வலுவான அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அணியும் தொடர்ச்சியான வெற்றிகளுடன் இறுதிப்போட்டியில் இடம்பிடித்துள்ளது. இதனால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள்…

Read More

ஐபிஎல் 2026 ஏலம்: இளம் இந்திய வீரர்கள் – கோடிகளில் குவிந்த ஒப்பந்தங்கள்

அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் அரங்கேறி, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தன. இந்த முறை, வழக்கமாக அதிக விலைக்கு போகும் பெரிய சர்வதேச நட்சத்திரங்களை விட, சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத இளம் இந்திய வீரர்களே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் காட்டிய திறமையை அடிப்படையாக கொண்டு, இந்த வீரர்கள் சாதனை அளவிலான தொகைகளுக்கு ஏலம் போய்…

Read More

இன்று 2026 ஐபிஎல் மினி ஏலம்: அபுதாபியில் நடைபெறுகிறது

அபுதாபி: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு 240 இந்திய வீரர்கள் மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 350 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு ஏலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அணிகள் தங்களது அணிகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த மினி ஏலத்தை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றன.

Read More

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில்…

Read More

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முடிவை தரும் 3வது ஒருநாள்

விசாகப்பட்டினம்:இந்தியாவின் சுற்றுப்பயணத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த இரண்டாம் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து முடிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், தொடரை வெல்லும் அணியை தீர்மானிக்கும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி…

Read More

2026 ஐபிஎல் மினி ஏலத்தில் மேக்ஸ்வெல் பங்கேற்கவில்லை – அணிகளுக்கு அதிர்ச்சி

இந்தியா:வரும் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஆல் ரௌண்டர் கிளென் மேக்ஸ்வெல் தனது பெயரை ஏலத்துக்காக பதிவு செய்யாமல் இருப்பது அணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஐபிஎலில் முக்கிய ஆட்டக்காரராக விளங்கி வந்த மேக்ஸ்வெல், இந்த முறை ஏலப் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரது அனுபவமும், அதிரடி ஆட்டமும் காரணமாக பல அணிகள் அவரது பெயரை எதிர்பார்த்து இருந்தன. ஆனால் அவரது விலகல், அணிகளின் கணக்கீடுகளில் மாற்றத்தை…

Read More

மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: எம்ஜிஆர் மைதானம் 16 நாட்கள் மூடல், பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரையில் நடைபெற உள்ள 14வது ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, உள்ளூர் வீரர்களும் பயிற்சியாளர்களும் மைதானத்தில் நுழைவது மற்றும் பயிற்சி செய்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை மதுரை எம்.ஜி.ஆர் அரங்கில் நடக்கிறது. உலகின் 12 முன்னணி நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் அணிகள் இதில் பங்கேற்கின்றன….

Read More

இரண்டாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம், 77 வருட சாதனையை இந்தியா முறியடிக்குமா என்ற கேள்வி!

இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி மேலோங்கிய நிலையில் உள்ளது. முதல் டெஸ்டை வென்ற அவர்கள், தற்போது கவுகாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டிலும் வலுவான நிலையைப் பிடித்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து, இந்திய அணி 201 ரன்களில் உறைந்து போனது. பின்னர், 4ஆம் நாள் காலை விக்கெட் இழப்பின்றி 26 ரன்களுடன் தென்ஆப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 94 ரன்கள், டோனி…

Read More

2வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு இந்தியா அவுட் – தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை

கவுகாத்தி: கவுகாத்தியின் பர்சாபரா மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சரணடைந்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா 489 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோர் அமைத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் சொதப்பினர்.தென் ஆப்ரிக்க…

Read More

பெண்கள் உலகக் கோப்பை கபடி: இன்று இந்தியா-ஈரான் அரையிறுதி மோதல்

டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 2வது பெண்கள் உலகக் கோப்பை கபடி தொடரில், லீக் சுற்றுப்போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. 11 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், சமநிலை மாறிய சுவாரஸ்ய ஆட்டம் வங்காளதேசம் 39–31 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.அதேபோல ‘பி’ பிரிவில் நடந்த இறுதி லீக் ஆட்டம் ஒன்றில் சீன தைபே அணி 63-28 என்ற புள்ளி…

Read More

ஆஸ்திரேலியாவிற்கு அபார வெற்றி : ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் 2 நாளில் முடிவு

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தைக் காட்டி, இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 5 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த டெஸ்ட், வெறும் 2 நாட்களில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் ஆல்-அவுட் ஆனது தொடரின் சூழ்நிலையே மாறியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் அணி சிறப்பாக செயல்பட்டு, எதிரணி அணியை அழுத்திய நிலையில் வைத்தது. பின்னர் வந்த ஆஸ்திரேலிய…

Read More

தோனியுடன் இணைவதற்காக ஆவலுடன் காத்திருக்கும் சஞ்சு சாம்சன் : உற்சாகம் வெளிப்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தோனியுடன் கழிக்கும் ஒவ்வொரு நேரமும் தன்னுக்கு ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். தோனியுடன் உரையாடுவது, உணவு பகிர்ந்து கொள்வது, கூடுதலாக பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக சஞ்சு தெரிவித்துள்ளார். “தோனியுடன் உரையாட, உணவு சாப்பிட, பயிற்சி மேற்கொள்ள மிகவும் ஆவலாக நான் காத்திருக்கிறேன்….

Read More

மதுரையில் சர்வதேச ஹாக்கி அரங்கு திறக்கத் தயாராகிறது – 13 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச ஹாக்கி அரங்கு நாளை (நவம்பர் 22) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 10.55 கோடி செலவில் இந்த அரங்கத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளது. அரங்கின் புதிய அமைப்பு மற்றும் பணிகள் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புற அழகுபடுத்தல் பின்னணி நுழைவாயில் மின்விளக்குகள், செயற்கை நீரூற்று மற்றும் ஹாக்கி ஸ்டிக் வடிவமைப்புடன் அலங்கரிக்கப்படுகிறது.இடம் முழுவதும் சாலை அமைப்பு, பூச்சு மற்றும் தரை வேலைகள் இன்று முடிக்கப்படுகின்றன….

Read More

IND vs RSA: இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு பதில் இவரா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தென்னாப்பிரிக்க அணி இந்தியா சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நாளை மறுநாள்…

Read More

டெம்பா பவுமா – தோல்வியே சந்திக்காத டெஸ்ட் கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, தனது டெஸ்ட் தலைமையில் இதுவரை ஒரு தோல்வியும் காணாத கேப்டனாக புதிய உயரங்களைத் தொட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த த்ரில் வெற்றியுடன், அவரது சாதனை மேலும் வலுவடைந்துள்ளது. 2023 முதல் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியை வழிநடத்தி வரும் பவுமா, முதல் கறுப்பின டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று வரலாற்றுப் பொறுப்பை சுமப்பதோடு பல முக்கிய சாதனைகளையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை…

Read More

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா வெற்றி – இந்தியா ஏன் தோற்றது?

தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், 2 டெஸ்ட், 3 ஓடிஐ மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் நவம்பர் 14 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரண்டரை நாட்களில் முடிவுக்கு வந்த இந்த டெஸ்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய மண்ணில் 15 ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்கா வெற்றி சாதித்துள்ளது. இந்தியாவும் 13 ஆண்டுகளுக்குப்…

Read More

ஜடேஜாவை ஏன் விற்றார்கள்? – மனம் திறந்து பேசிய CSK நிர்வாக இயக்குநர்

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை விற்று, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்த்தது குறித்து ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், CSK நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். “CSK எடுத்த மிகவும் கடினமான முடிவு…” வீடியோவில் அவர் கூறியதாவது: “ஜடேஜாவை விற்பது CSK வரலாற்றில் மிகக் கடினமான முடிவுகளில் ஒன்று. 2012 முதல் அணியின் முக்கிய தூணாக…

Read More

“தோனியா? கோலியா?” இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதில்

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, 52 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னை நகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் விசேஷ பாராட்டு விழா இன்று…

Read More

நிதிஷ் ரெட்டியை கழட்டிவிட்ட கம்பீர்… பிளேயிங் லெவனில் இவருக்கும் இடமில்லை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (நவம்பர் 14) கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியை டெம்பா பவுமா தலைமையேற்கிறார். இந்நிலையில், சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஈடன் கார்டன்ஸில் டெஸ்ட் ஆட உள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கு வங்கதேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் ஆடி வெற்றி பெற்றது. ரெட் பால் டெஸ்ட் பார்த்தால்,…

Read More

இந்திய அணியில் ஷமி ஏன் இல்லை? – தேர்வுக்குழுவிற்கு கங்குலி கேள்வி!

ஹைதராபாத்:இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சிறப்பான ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸைக் கருத்தில் கொண்டு, அவரை அனைத்து போட்டித் தொடர்களிலும் விளையாட வைக்கலாம் என முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி விரைவில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோதவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவடைகிறது. பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும்…

Read More

ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவது சந்தேகம்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் (ODI) தொடரில் இந்திய அணியின் நடுத்தர வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் அவர் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவ அறிக்கைகள் மற்றும் தேசிய…

Read More

நேபாள நாட்டில் நடைபெற்ற SGADF 2025 விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று கோவை மாணவர்கள் சாதனை

கோவை: நேபாளத்தில் கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை, ரங்கசாலா ஸ்டேடியத்தில், சர்வதேச அளவிலான இன்டோ நேபாள் SGADF 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தடகளம், கபடி, கிரிக்கெட், சிலம்பம், யோகா, கராத்தே, கைப்பந்து, கூடைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய போட்டிகள் நடைபெற்றன. சுமார் 1000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய சார்பாக கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த வருண்…

Read More

IND vs AUS 5th T20I: மழையால் கைவிடப்பட்ட போட்டி: தொடரை கைப்பற்றிய இந்தியா!

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் இறுதி டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று அசத்தியது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த டி20 தொடரில், முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. ஆனால், ஹோபார்ட் மற்றும் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால், தொடர் முடிவுக்கு முன்னரே…

Read More

சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க சிஎஸ்கே பெரிய முடிவு எடுக்கத் தயாரா?

ஐபிஎல் 2026 ஏலம் நெருங்கி வரும் நிலையில், டிரேடிங் தொடர்பான செய்திகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் முக்கியமாக பேசப்படுவது — ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள். சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேற விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தல தோனிக்குப் பிந்தைய திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வரும் சிஎஸ்கே நிர்வாகம், அவரை அணியில் சேர்க்க…

Read More

ஜெய் ஷா தலையீட்டுக்கு பின் பிரதிகாவிற்கு உலகக்கோப்பை பதக்கம்!

கணுக்கால் காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் விளையாட முடியாத இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு, உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு முதலில் பதக்கம் வழங்கப்படவில்லை. இதனால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால், ஜெய் ஷா தலையீட்டின் மூலம் ஐசிசியுடன் பேசி, பிரதிகாவிற்கும் பதக்கம் கிடைத்துள்ளது. பிரதிகா அதை பெற்றபோது, “அந்த தருணம் என் மனதைக் கனக்க வைத்தது… நான் பொதுவாக அழுவதில்லை, ஆனால் அந்த பதக்கத்தை பார்த்தவுடன் உண்மையிலேயே கண்ணீர் வந்தது,” என அவர் உணர்ச்சியுடன்…

Read More

மீண்டும் காயம் – ரிஷப் பண்ட் ஆட்டத்தை பாதியில் விட்டு வெளியேறினார்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் காயமடைந்து ஆட்டத்தை பாதியில் விட்டு வெளியேறியுள்ளார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ‘ஏ’ அணி, துருவ் ஜூரல் விளாசிய 132 ரன்களின் ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலாக தென்னாப்பிரிக்கா ‘ஏ’…

Read More

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி! 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா, மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. நவம்பர் 2 அன்று மழையால் இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், டாஸ்…

Read More

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: வரலாறு படைக்கும் நேரம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் தருணம் நெருங்கி வருகிறது.2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நவம்பர் 2 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மோதவிருக்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பாரம்பரிய வல்லணிகள் இல்லாத இந்த இறுதிப் போட்டி, இரு அணிகளுக்கும் முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது….

Read More

இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? – பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியும், வங்கதேசம் அணியும் மோதின. முதல் போட்டியில் இலங்கை அணியை, வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது. கடந்த…

Read More

அபிஷேக் சர்மா அபாரம்; 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வி – ஃபைனலுக்கு சென்ற இந்தியா

வங்கதேசம் அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’…

Read More

தோல்வியை சந்திக்காத இந்திய அணிக்கு சவால் அளிக்குமா வங்கதேசம்?

ஆசியக்கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று இந்திய அணியும் வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும், தோல்வியை தழுவாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்திய அணி. லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணியை வீழ்த்தி இருந்தது. அதேபோல், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது அபார…

Read More
JCM

இந்தியாவிற்கு டஃப் கொடுத்த ஓமன்… 8 பவுலர்களை பயன்படுத்திய கேப்டன் ‘ஸ்கை’

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தொடரின் 12ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய…

Read More