பி.எஸ்.எல்.வி. சி-62 தயாராகிறது : இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டின் ஏவலுக்கு தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று காலை முதல் கவுண்ட்டவுன் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மற்றும் தொழில்நுட்ப நிலைகள் சாதகமாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Read More

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலமானார்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசத்தின் தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக வங்கதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது மறைவுச் செய்தி வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கலிதா ஜியா, நாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்து, பல்வேறு முக்கிய அரசியல்…

Read More

உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம்

உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள மக்கள் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது பெரும் ஈர்ப்பு காட்டி வருவதாகவும் பிரதமர் மோடி…

Read More

‘பாகுபலி’ LVM3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள்

இந்தியாவின் ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படும் இஸ்ரோவின் கனரக ஏவுகணையான LVM3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ளூபேர்ட்–6’ (BlueBird-6) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி, செயற்கைக்கோள் அதன் குறிப்பிட்ட கக்ஷியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம், தொலைதூர மற்றும் சேவை வசதி குறைந்த பகுதிகளுக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 4ஜி மற்றும்…

Read More

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான சேவைகள் பாதிப்பு

டெல்லி:டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 20) 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிமூட்டம் காரணமாக 88 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 89 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகாலை மற்றும் காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட…

Read More

ISRO | டிசம்பர் 24ம் தேதி இஸ்ரோவின் LVM3 ராக்கெட் விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் LVM3 ராக்கெட் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குச் சொந்தமான ஒரு முக்கிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த LVM3 ராக்கெட், டிசம்பர் 24ம் தேதி காலை 8.54 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின் கனரக ஏவுகணையான LVM3 மூலம் சர்வதேச அளவிலான விண்வெளி ஒத்துழைப்பு…

Read More

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சி: தலசீமியா சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று

மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசத்தில் தலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு தவறுதலாக HIV தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் தலசீமியா சிகிச்சையில் இருந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லேபரட்டரி பொறுப்பாளர் உள்ளிட்ட 4 பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மத்திய பிரதேச அரசு நடவடிக்கை…

Read More

எத்தியோப்பியா: பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

அடிஸ் அபாபா: அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பும், உயரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள விமான நிலையத்திற்கு நேரில் வந்த அந்நாட்டு பிரதமர் அபி அஹமது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது….

Read More

‘YOU BASTARDS’ – ஊடக பொறுப்பின் இரண்டு முகங்கள்

ஆஸ்திரேலியாவின் Daily Telegraph நாளிதழ், போண்டி கடற்கரை பகுதியில் நடந்த யூதர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலை முன்பக்கத்தில் ஒரே வரியில் சுட்டிக்காட்டியது – “YOU BASTARDS.” முதல் பார்வையில் இந்த தலைப்பு கடுமையானதாக தோன்றலாம். ஆனால் அதன் பின்னணி, ஒரு குறிப்பிட்ட ஊடகப் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. அந்த செய்தியில், குற்றவாளியின் பெயர், குடும்பப் பின்னணி, கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை போன்ற விவரங்கள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மாறாக, சம்பவத்தின் தீவிரம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மட்டுமே செய்தியின்…

Read More

இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டை முடித்து அதிபர் புதின் ரஷியா திரும்பினார்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது 2 நாள் அரசு முறை இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு ரஷியா திரும்பினார். புதன்கிழமை இரவு டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி தானே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பயணத்தின் போது அதிபர் புதின் பல்வேறு அரசியல் மற்றும் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் முக்கியமாக, நேற்று நடைபெற்ற 23வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் புதினும் இணைந்து கலந்துகொண்டனர். மாநாட்டுக்குப்…

Read More

எச்-1பி விசா மூலம் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது – எலான் மஸ்க்

வாஷிங்டன்: எச்-1பி விசா திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு, குறிப்பாக இந்தியப் பொறியாளர்கள் வழங்கிய பங்களிப்பு மறுக்க முடியாதது என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்‌எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல பங்கு வர்த்தக தளமான செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF’ பாட்காஸ்டின் 16வது பகுதி சமீபத்தில் வெளியானது. இதில் விருந்தினராக கலந்து கொண்ட மஸ்க், ஸ்டார்ட்-அப் சூழல், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, தானியங்கி வாகனங்கள், சூரிய சக்தி தொழில்நுட்பம்…

Read More

ஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் உருவாகி வரும் அதிர்ச்சி தகவல்

பூமியில் ஒரு புதிய பெருங்கடல் உருவாகும் செயல்முறை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முன்பெல்லாம் இந்த மாற்றம் 50 இலட்சம் முதல் 1 கோடி ஆண்டுகள் எடுக்கும் என கருதப்பட்டாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் இந்த நிகழ்வு அதைவிட மிக விரைவாக — ஏறக்குறைய 10 இலட்சம் ஆண்டுகளில், சில நேரங்களில் அதிலும் குறைவாக — நடைபெறலாம் எனக் கூறுகின்றன. இந்த கருத்தை முன்வைத்தவர், அமெரிக்க…

Read More

பாகிஸ்தானின் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 9 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்குக் காரணம் டெகரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் காபூல் அரசு அடைக்கலம் வழங்குவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த மாதமே பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிந்தியும் சூழல் சமாதானமாகவில்லை. இந்நிலையில், மோதலின் தீவிரம் மேலும் உயர்…

Read More

அன்பை பொழிந்த ட்ரம்ப்-ஜி ஜின்பிங் : புதிய உலக அரசியல் சலசலப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார் என்று சமூக வலைத்தள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். உரையாடல் நேரத்தில், ஜி ஜின்பிங் சீனாவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ட்ரம்ப் தாமும் ஜி ஜின்பிங்கை அமெரிக்க வர அழைத்ததாகவும், அந்த அழைப்பை சீன அதிபர் ஏற்றுக்கொண்டதால் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு வர உள்ளதாகவும்…

Read More

காசாவில் 25 மீ ஆழத்தில் 7 கி.மீ நீள மிகப்பெரிய சுரங்கம் – இஸ்ரேல் படை வெளியிட்ட வீடியோ வைரல்

காசா: ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கிய 2023 அக்டோபர் 7 முதல் போர்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் வீடுகளின் அடித்தளங்களில், நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களில் மறைந்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் படை குற்றம் சாட்டி வருகிறது.இந்த சுரங்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக கண்டுபிடித்து அழிக்கும் பணியில் இஸ்ரேல் படை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு காசா எல்லைப்பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரியதாகிய புதிய ரகசிய சுரங்கம்…

Read More

ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப், அரசியலில் அதிர்ச்சி; எதிரி இன்று நண்பன்!

அமெரிக்க அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கடுமையாக விமர்சித்த நியூயார்க் மேயர் ஜேஹ்ரான் மம்தானியை, தற்போது நேரடியாக பாராட்டி முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வெளிவந்தது. மோதலாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, ஆனால் விஷயம் மாறியது! மம்தானியை “கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்” என்று முன்பு ட்ரம்ப் பலமுறை தாக்கியிருந்தார். அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட்டாட்சி நிதியை நிறுத்துவேன்…

Read More

மாஸ்கோ ஏஐ கண்காட்சியில் மனித வடிவ ரோபோ நடனமாடி புதினை வரவேற்ற காட்சி வைரல்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கண்காட்சியில், அதிபர் விளாடிமிர் புதினை மனித வடிவ ரோபோ ஒன்று நடனமாடி வரவேற்ற காட்சி இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்பெர்பேங்க், தங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மாஸ்கோவில் இந்த ஏஐ கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அதிபர் புதின் வருகை தந்தார். கண்காட்சிக்கு வந்த புதினை, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ‘கிரீன்’ என்ற மனித வடிவ ரோபோ…

Read More

காஸா போர் நிறுத்தத்தில் ட்ரம்ப் மட்டும் அல்ல!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காஸாவில் போர் நிறுத்தத்தை தனது சாதனையாக காட்டியாலும், உண்மையில் பல நாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார்; ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அதற்குப் பின் ஒப்புக்கொண்டதால் தாக்குதல் நிறுத்தப்பட்டது. கத்தார் ஆரம்பத்திலிருந்தே மத்தியஸ்தராக செயல்பட்டு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இடம் அளித்து அமைதிக்கு வழி செய்தது. கத்தார் அழுத்தத்தின்படி அமெரிக்கா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அரபு நாடுகள் போர் நிறுத்தம் தொடர்பில் ஐநா பொதுச் சபையில் அழுத்தம்…

Read More

தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை… தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல, பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாடினார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள்…

Read More

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை…

Read More
JCM

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை…

Read More
JCM

‘யாருடைய மிரட்டலுக்கும் சீனா அஞ்சாது’ – ஷி ஜின்பிங் மறைமுக தாக்கு

சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை என்றும், சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்றும் சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். அமெரிக்க வரி விதிப்பால், மூன்று முக்கிய நாடுகளும்…

Read More