புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: முன்னாள் IFS அதிகாரி, GST கண்காணிப்பாளர் கைது: மொத்தம் 23 பேர் சிக்கினர்
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்துகளை தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்த வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா ஆகியோர், சிறப்பு புலனாய்வு குழு (SIT) போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு, பிரபல மருந்து நிறுவனமான சன் பார்மா அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரை தொடர்ந்து, புதுச்சேரி CBCID போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,…

