Headlines
JCM

இந்தியாவிற்கு டஃப் கொடுத்த ஓமன்… 8 பவுலர்களை பயன்படுத்திய கேப்டன் ‘ஸ்கை’

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தொடரின் 12ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய…

Read More

கடற்கரை தூய்மை பணியில் இணைந்த துணைநிலை ஆளுநர் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி புதுச்சேரி கடலோர காவல் படை சார்பில் தூய்மை தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், தலைமைச் செயலர் சரத் சவுகான், கடலோர காவல் படை கமாண்டர் DIG தசீலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், சமூக அலுவலர்கள்…

Read More
தவெக தலைவர் விஜய்

நாகை செல்கிறார் தவெக தலைவர் விஜய்… பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பிரசாரம்…

தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும்…

Read More
SS News

ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை… புதுச்சேரியில் பரபரப்பு…

ஆபரேஷன் திரிசூலம் திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் விடியற்காலை முதல் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காவல்துறையில் ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது. அதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சேரி முழுவதும் அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட காவல்…

Read More

குடிநீர் குடித்து உயிரிழந்த அவலம்.. அரசு அலட்சிய போக்கு… ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்தவர்களின் குடும்பத்தினரை நாம் சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினோம். புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பொதுமக்கள் பருகி உள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானோர் வாந்தி, பேதி ஏற்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

Read More
SS News

அமெரிக்கா : சட்டவிரோதமாக தங்கியிருந்த 475 பேர்… கார் உற்பத்தி ஆலையில் வேலை…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் முழு வீச்சாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்தோடு அவர்கள் நாடு கடத்தப்படும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரிய நிறுவனம் ஒன்றின் கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்து…

Read More

வக்பு திருத்த மசோதா: தடை விதிக்க மறுப்பு; முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது….

Read More

அஜித் வந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வரும்’ – விஜய் மீது சீமான் கடும் தாக்கு

நடிகர்கள் அஜித்குமார், ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா ஆகியோர் வந்தால் விஜய்யை விட அதிக கூட்டம் வரும் என்றும் கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளை பாருங்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இசைத்துறையில் இளையராஜாவை விட சாதனையாளர்கள் இதுவரை இல்லை….

Read More
SS News

திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.. அதிமுக காணாமல் போகும்.. – புகழேந்தி அதிரடி

திமுகவுக்கு தவெகாவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது என்றும் அவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்து…

Read More