ஸ்டாலின் ஸ்டைலை Follow செய்த CM விஜய்?

தமிழ்நாடு முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் ஜூன் 22ஆம் தேதி மீண்டும் நடைபெற்றது.

அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது கருத்துகளுக்கு பல அமைச்சர்கள் பதிலளித்தனர். இதையடுத்து, இதுகுறித்து முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். தனது உரையின் போது திமுக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கொளத்தூர் தொகுதி தேர்தல் தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இதனால் திமுக உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது பேச்சின் இறுதியில் ஒரு குறிப்பிட்ட கைச்சைகையை வெளிப்படுத்தினார்.

அந்த கைச்சைகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்திருந்த பிரபலமான செய்கையை நினைவூட்டும் வகையில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது முதலமைச்சர் விஜயும் அதேபோன்ற செய்கையை செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *