‘அட்டாக்கர் நாயகி அவந்திகா’
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான தம்பதி சுந்தர் சி – குஷ்பூ. இவர்களின் மூத்தமகள் அவந்திகா. இவர்களில் இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பொன்னியின் செல்வன்',பொன்னியின் செல்வன் 2′ மற்றும் `தக் லைஃப்’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். மூத்த மகளான அவந்திகா “அட்டாக்கர்” திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமாகிறார்.
அட்டாக்கர்’ படப்பிடிப்பு தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும். இத்திரைப்படம் வாலிபால் விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகிவருகிறதாம். அமட்டுமில்லாமல் , இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது .
தமிழில் அட்டாக்கர் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ள அவந்திகா சுஜேஷ் இயக்கும் மலையாளப் படமான ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் மலையாளத்திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான பவிஷ் அட்டாக்கர் திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

