பிரதமர் மோடி பெருமிதம்…
2014 மற்றும் 2019 தேர்தலை தொடர்ந்து 2024 தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிப் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஜூன் 9-ந் தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார்.கடந்த 12 ஆண்டுகளில் தனது அரசு மேற்கொண்ட மக்கள் நல்லதுதிட்டங்களை பிரதமர் மோடி பட்டியிலிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் ஏழைகளில் நலனுக்காக 12 ஆண்டுகள் என ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார் .
இதில் அவர் “கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த மாற்றங்களின் மையத்தில் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலன் உள்ளது. நாங்கள் எப்போதும் அந்த்யோதயாவால் (கடைசி மனிதனின் எழுச்சி) உத்வேகம் பெற்றுள்ளோம். பல தசாப்தங்களாகப் பின்தங்கியிருந்தவர்களுக்கு வளர்ச்சியின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களின் முயற்சியாக இருந்து வருகிறது. ஜன் தன் கணக்குகள் மற்றும் நேரடிப் பணப் பரிமாற்றம் முதல் ஸ்வச் பாரத், பிஎம் ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத் மற்றும் பல திட்டங்கள் வரை, ஒவ்வொரு முன்னெடுப்பும் மக்களுக்கு கண்ணியமும் வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு எளிய நோக்கத்தால் உந்தப்பட்டுள்ளது.
ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. நேரடிப் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம், மக்களுக்கு ஆதரவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் சென்றடைகிறது. இது நிதிக்கசிவுகளைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்தி, நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இவ்வாறுதான், கரீப் கல்யாண் (ஏழைகளின் நலன்) முன்னெடுக்கும் பயணம், மனித மேம்பாட்டை நோக்கிய ஒரு கூட்டு இயக்கமாகவும், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற நமது கனவை நனவாக்குவதாகவும் மாறியுள்ளது.”எனவும் கூறியுள்ளார் .

