இந்திய அணியில் சுட்டிக்குழந்தை…கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர்…
டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் மட்டுமின்ட்றி,ஆடும் லெவனிலும் (Playing XI) இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இந்த மூன்று தொடர்களிலும் இடம்பெற்றுள்ளார்.
உலகப்புகழ்ப் பெற்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடி தனது திறமையை வெளியிட்ட வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட்டின் அடிப்படையை மாற்றிவிட்டார். இந்த சீசனில் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் எதிர்கொண்ட ஒட்டுமொத்த பந்துகள் 327. எடுத்த ரன்கள் 776. இதையடுத்து அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்தது. அதற்கேற்ப தற்போது இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருக்கிறார்.
இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் 16 வயதில் இந்திய அணிக்கு தேர்வான உலக சாதனை முறியடித்து 15 வயதில் தேசிய அணியில் இடம்பிடித்து வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.

