இந்தியாவில் உருவாக போகும் அடுத்த மிகப்பெரிய பிரச்சனை என்ன ? பொருளாதாரம் இல்லை மனநலம் பாதிப்புதான் எச்சரித்த என்.சி.இ.ஆர்.டி (NCERT) மற்றும் யுனிசெஃப்

என்.சி.இ.ஆர்.டி (NCERT) மற்றும் யுனிசெஃப் ஆய்வுகளின்படி, பள்ளி மாணவர்களில் 11 சதவீதம் பேர் கடுமையான பதற்றத்தாலும், 43 சதவீதம் பேர் மனநிலை மாற்றங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 43 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் உள்ள நிலையில், அவர்களுக்கான மனநல சிகிச்சை மையங்கள் இன்னும் போதிய அளவில் இல்லை.

மேலும், மனநல மருத்துவரை அணுகுவதையே அவமானமாகப் பார்க்கும் சமூகப் பார்வையின் காரணமாக, பலர் தங்களுக்குள் இருக்கும் வலியை வெளியே சொல்வதில்லை. இந்தியாவின் அடுத்த பெரிய நெருக்கடி பொருளாதாரம் அல்ல, மனநலமாகத்தான் இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தேசிய மனநல ஆய்வின்படி, ஒவ்வொரு 10 இந்தியர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு மனநலப் பிரச்சினையுடன் வாழ்ந்து வருகிறார்.

இதன் படி பார்க்கும் போது பல இளம் ஊழியர்கள் மனதால் சோர்வாக சமூக ஊடகங்களில் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதும், கல்வி மற்றும் வேலை அழுத்தமுமே இதற்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *