மலையாள திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு …
மலையாள திரையுலகில் தேசிய விருது பெற்ற நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம் குமார் (57) உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு மலையாளத் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சலீம் குமாருக்கு திடீரென நேற்று அதிகாலை சுமார் 2:50 மணி அளவில் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு 10:43 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிள்ளதுனர் .
சலீம் குமார் நீண்ட காலமாக கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.
மலையாளத் திரைப்பட வரலாற்றின் மிக முக்கிய நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஆதாமின்றெ மகன் அபூ’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் மிக உயரிய தேசிய விருது கிடைத்தது.மிமிக்ரி கலைஞராகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், 30 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அவரது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் விரைவில் மலையாளத் திரையுலக வட்டாரங்களால் முறைப்படி அறிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

