தமிழக கோயில்களில் ஆன்லைனில் முன்பதிவு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி!
இந்து அறிநிலையத்துறை தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய இனி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ஆந்திர பக்தர்களிடம் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி மர்ம நபர் மோசடி செய்ய முயற்சித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டாயமாக்க இந்து அறிநிலையத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலைக்கு ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,அவர்களிடம் சிறப்பு தரிசனம் மூலம் விரைவாக சாமி பார்க்க அழைத்துச் செல்வதாக கூறி பணம் பறிக்கும் முயற்சியில் சில பேர் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.கோவில் நிர்வாகிகள் இதை கண்டறிந்து விசாரித்த போது தப்பித்து விட்டதாகவும் சிசிடிவி மூலம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது .
இந்நிலையில்,அறநிலையத்துறை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் முறையை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடி உள்ளிட்டவற்றை தவிர்க்கவும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

