புகாருக்கு உடனடி ஆக்ஷன்! காமராஜ் நகர் MLA அதிரடி…
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகரில், வாய்க்கால் குப்பைகள் தொடர்பான மக்கள் புகாருக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகரில் வீட்டின் அருகே செல்லும் வாய்க்காலில், குப்பைகள் மற்றும் மணல் அடைத்துக் கொண்டு இருப்பதாகவும், இதனால் கழிவுநீர்கள் வாய்க்காலில் செல்ல தடையாக இருப்பதாகவும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ-வுமான சார்லஸ் மார்டினிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் உடனடியாக இன்று வேலை ஆட்களை அனுப்பி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உடனடியாக வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்ட நிலையில், மக்கள் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

