பாடகி கெனிஷாவுக்கு அபராதமா?
சமீபத்தில் ரவி மோகனின் தோழியாக ட்ரென்டான கெனிஷாவுக்கு நீதிமன்றம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்ததுள்ளது.
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், கெனிஷாவுக்கு ஷார்ஜா நீதிமன்றம் 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜா நகரில் வசித்த இந்திய பெண் ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பின்னணி பாடகி கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் மீது அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

