லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்டினுக்கு ஆதரவாக LJK தலைவர் தீவிர பிரசாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி இணைச்செயலாளர் லீமா ரோஸ் மார்டின் போட்டியிடுகிறார்.

அவர் தொகுதி முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், அவருக்கு ஆதரவாக அவருடைய மகனும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரசாரம் மேற்கொள்ள களத்தில் இறங்கியுள்ளார்

முன்னதாக அவர், பிரசாரம் செய்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கு அவருக்கு புள்ளம்பாடி பகுதியிலிருந்து வந்த இளைஞர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும், 50-க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துகொண்டனர்

இதைதொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளான க.மணிமாறன், ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்

இதையடுத்து, லால்குடி தொகுதியில் தனது பரப்புரை மேற்கொண்டார். இதில், ‘திமுக ஆட்சி ஊழல் நிதமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி இணைச்செயலாளர் லீமா ரோஸ் மார்டின் போட்டியிடுகிறார்.

அவர் தொகுதி முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், அவருக்கு ஆதரவாக அவருடைய மகனும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரசாரம் மேற்கொள்ள களத்தில் இறங்கியுள்ளார்

முன்னதாக அவர், பிரசாரம் செய்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கு அவருக்கு புள்ளம்பாடி பகுதியிலிருந்து வந்த இளைஞர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும், 50-க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துகொண்டனர்

இதைதொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளான க.மணிமாறன், ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்

இதையடுத்து, லால்குடி தொகுதியில் தனது பரப்புரை மேற்கொண்டார். இதில், ‘திமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி; இந்த ஆட்சியில் கிட்னி திருட்டு என்பது சரளமாக நடக்கின்றது; இந்த குற்றச்செயல்களை வெளிக்கொண்டு வர அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் முடியும்’ என பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *