அதிகம் சம்பளம் வாங்கும் இந்தியா நடிகர் …
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதலிடம் பிடித்துள்ளார்.‘தி கோட்’ படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் பெற்ற விஜயையும் அல்லு அர்ஜுன் முந்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அல்லு அர்ஜுன் நடித்த கடைசியாக வெளிவந்த புஷ்பா-2 1,700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது .இந்த படத்துக்காக அவர் ரூ.300 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.இது பாகுபலி ஒட்டுமொத்த பட்கேட் தொகையை விட அதிகம் என கூறப்படுகிறது .
பல ஆண்டுகளாக பாலிவுட் நடிகர்களே இதில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது தென்னிந்தியப் படங்களின் ‘பான்-இந்திய’ (Pan-India) வளர்ச்சி இந்த எல்லையை மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களையும் முந்தி, தற்போது இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் உருவெடுத்துள்ளார்.

