பி.எஸ்.எல்.வி. சி-62 தயாராகிறது : இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டின் ஏவலுக்கு தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று காலை முதல் கவுண்ட்டவுன் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மற்றும் தொழில்நுட்ப நிலைகள் சாதகமாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

