விடை பெற்றார் சினிமா வித்தகர்…

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக தனித்துவமான முத்திரை பதித்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழிந்தார் .அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

1953-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளங்கோவிலில் கிருஷ்ணசாமி பாக்யராஜ் என்ற இயற்பெயருடன் பிறந்தார்.

திரையுலகில் தனது பயணத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தொடங்கிய அவர், ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இயக்குநர், நடிகர், கதை, திரைக்கதை மற்றும் வசன ஆசிரியர் எனப் பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தி, தொடர்ச்சியாக வெற்றிப் படைப்புகளை வழங்கினார்.

குடும்ப உறவுகள், நகைச்சுவை, சமூகப் பார்வை ஆகியவற்றை இயல்பான கதை சொல்லும் பாணியுடன் இணைத்து, ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். எதிர்பாராத திருப்பங்கள், எதார்த்தமான உரையாடல்கள், வலுவான கதாபாத்திரங்கள் ஆகியவை அவரது திரைக்கதைகளின் அடையாளமாக அமைந்தன.

திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பல பிலிம்பேர் விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களைப் பெற்றார்.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராக போற்றப்படும் கே. பாக்யராஜ், தனது தனித்துவமான படைப்புகளால் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பார்.

“திரைக்கதையின் மன்னனாக வாழ்ந்த பாக்யராஜ்… இன்று நினைவுகளாக மட்டும் எஞ்சியிருக்கிறார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *