இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

Jio Hotstar

`House of the Dragon’ season 3 – June 22

இரண்டு சீசன்களாக வந்திருக்கும் `House of the Dragon’ மூன்றாம் சீசன் வந்திருக்கிறது. போரின் விளைவுகளாக நகர இருக்கும் கதை வாரம் ஒரு எபிசோடாக வர இருக்கிறது.

Lingam (Tamil) – June 26

லட்சுமி சரவணக்குமார் இயக்கத்தில் கதிர் நடித்துள்ள சீரிஸ் `லிங்கம்’. கபடி வீரராக விரும்பிய ஒருவர் கேங்ஸ்டர் ஆன உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

Prime

`Gram Chikitsalay’ (Hindhi) – June 23

ராகுல் பாண்டே இயக்கியுள்ள சீரிஸ் `Gram Chikitsalay’யின் இரண்டாம் சீசன் வந்துள்ளது. நகரத்தில் இருந்து கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் மருத்துவர் சந்திக்கும் நிகழ்வுகளே கதை.

`The Sheep Detectives’ – June 24

Hugh Jackman நடிப்பில் Kyle Balda இயக்கிய படம் `The Sheep Detectives’. ஆடு மேய்ப்பரின் மர்மமான மரணம் கொலை என தெரிந்ததும், அதை விசாரிக்கின்றன அவர் கண்காணிப்பில் வளர்ந்த ஆடுகள்.

Netflix

Blast (Tamil) – June 25

அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்த படம் `பிளாஸ்ட்’. அசாதாரண பிரச்னையில் சிக்கும் ஆக்‌ஷன் குடும்பத்தின் கதை.

திரையில் மோதும் படங்கள்

Anandhan Kaadu (Malayalam) – June 25

ஆர்யா நடித்துள்ள படம் `அனந்தன் காடு’. தன் இழப்புக்குப் பழிவாங்கும் இளைஞர் பற்றிய கதை.

Con City (Tamil) – June 26

அர்ஜூன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகிபாபு நடித்துள்ள படம் `கான் சிட்டி’. பெரிய பிரச்னையிலிருந்து தப்ப முயலும் ஒரு குடும்பத்தின் கதை.

Angikaaram (Tamil) – June 26

கே ஜே ஆர் நடித்துள்ள படம் `அங்கீகாரம்’. தடகளப் போட்டியில் சாதிக்க நினைக்கும் இளைஞன் சந்திக்கும் தடைகளே கதை.

Heartin (Tamil) – June 26

சனந்த், மடோனா, இமையா நடித்துள்ள படம் `ஹார்டின்’. காதல் சிக்கல்களே கதைக்களம்.

Uyir (Malayalam) – June 26

ரோஷன் மேத்திவ் நடித்துள்ள படம் `Uyir’. கிணற்றிலிருந்து கிடைக்கும் பெண்ணின் சடலம் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே கதை.

Welcome To The Jungle (Hindi) – June 26

அக்‌ஷய் குமார் நடிப்பில் கபீர் கான் இயக்கியுள்ள படம் `Welcome To The Jungle’. காட்டுக்குள் செல்லும் ஒரு குழுவின் மிஷனே கதை.

Supergirl (English) – June 26

Craig Gillespie இயக்கியுள்ள படம் `Supergirl’. சூப்பர்கேர்ளை ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் பட இறுதியில் அறிமுகப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக சூப்பர்கேர்ளுக்கு வரும் சவால்கள் குறித்த படமாக உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *