பிக் பாஸ் 10: விஜய் சேதுபதியை வசைபாடுவதை நிறுத்துங்கள் – சீமான்
பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்து, முதல்வர் விஜய்யை குறிவைத்து பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து விஜய் சேதுபதியை தவெகவினர் விமர்சித்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றும், பொதுவான கருத்தை அரசியலுடன் தொடர்புபடுத்தி அவரை இழிவுபடுத்துவதும் மிரட்டுவதும் ஜனநாயக பண்பல்ல என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
“கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; வசை, மிரட்டலால் கருத்துரிமையை முடக்காதீர்கள்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

