இந்தியா – தென்ஆப்பிரிக்கா முடிவை தரும் 3வது ஒருநாள்
விசாகப்பட்டினம்:
இந்தியாவின் சுற்றுப்பயணத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த இரண்டாம் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து முடிவை நோக்கி செல்கிறது.
இந்நிலையில், தொடரை வெல்லும் அணியை தீர்மானிக்கும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன் நடைபெற்ற டாஸில் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் வெற்றி பெற்று, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்க அணி ஆரம்ப பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.
இந்தியா அணியின் இறங்கிய வீரர்கள்:
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), திலக் வர்மா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
தென்ஆப்பிரிக்கா அணியின் இறங்கிய வீரர்கள்:
ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, பார்த்மென்.

