புதுச்சேரியில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் ….

புதுச்சேரியில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை பிரெஞ்சு ரெஸ்டாரண்டிற்கு வாடகை விட்ட கொடுமை புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் துவங்கப்பட்ட பள்ளிகளில், கிறிஸ்தவ, ஆங்கிலோ இந்தியன் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்து மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதனைக் கண்ட அப்போதைய பொன்னு முருகேசப் பிள்ளை தலைமையில் 20 இந்து இளைஞர்கள் 1880ம் ஆண்டு பொது தொண்டு…

Read More

கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி

புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்த 2 குடும்பத்தினருக்கு, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பொதுமக்கள் பருகி உள்ளனர். இதில்…

Read More

இலவச மதுபாட்டில் கேட்டு தகராறு – பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய ரவுடி கும்பல்

புதுச்சேரியில் இலவச மதுபாட்டில்கள் கேட்டு, ஊழியரை மிரட்டிய ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி அரியூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மதுபான கடையில், ரவுடிகள் சிலர் தங்களுக்கு இலவசமாக மதுபானம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கடை ஊழியர், மதுபானம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரவுடிகள் கடை மீது, பெட்ரோல் குண்டுகளை வீசிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ…

Read More

வணிகர்கள் உரிமை மாநாடு: சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாட்டில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று செவ்வாய்கிழமை (23-09-25) மாலை நடக்கிறது. மாநாட்டுக்கு புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டார். அங்காளன் எம்.எல்.ஏ., வில்லியம் ரீகன் ஜான்குமார், புதுவை வணிகர்கள்…

Read More

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது – உல்லாசத்தில் ஈடுபட்டது அம்பலம்

ஆரோவில் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காவல்துறையில் ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது. அதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி முழுவதும்…

Read More

சிறப்பு மிகு நவராத்திரி விழா! – வீடுகளில் கொலு வைத்து கிராம மக்கள் வழிபாடு

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை போற்றியும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா…

Read More

மாசு கலந்த குடிநீர் விநியோகம்; காங். தர்ணா போராட்டம் – துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெல்லித்தோப்பு உருளையன்பேட்டை பகுதிகளில் மாசு கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அசுத்த குடிநீரை குடித்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே நேற்று நெல்லித்தோப்பு பகுதிகளில் கான்வென்ட் வீதி, பள்ளிவாசல்…

Read More

ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் – போலீஸார் எச்சரிக்கை!

ஆன்லைனில் வெளியாகும் பட்டாசு விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய இணைய யுகத்தில், சீப்பு, சோப்பு முதல் மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் வரை ஆன்லைனில் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. அதிலும், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதில் பலரும் ஏமாற்றம் அடைந்த பின்பு, காவல்துறையினரை நாடிச்…

Read More

புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு – சுயேட்சை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கைது

புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் – புதுச்சேரி – நாகப்பட்டினம் நான்குவழிச் சாலையில், புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், இரு மாநில மக்களின் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து காரைக்கால் தெற்கு தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு போராட்டத்தில்…

Read More

கடற்கரை தூய்மை பணியில் இணைந்த துணைநிலை ஆளுநர் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி புதுச்சேரி கடலோர காவல் படை சார்பில் தூய்மை தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், தலைமைச் செயலர் சரத் சவுகான், கடலோர காவல் படை கமாண்டர் DIG தசீலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், சமூக அலுவலர்கள்…

Read More