தண்ணீர் குடிக்கும் Ai

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஏஐ (AI) உலகையே ஆண்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஐ.நா. பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கையின்படி, ஏஐ பயன்பாட்டால் மின்சார நுகர்வு, கார்பன் உமிழ்வு மற்றும் நீர்ப் பயன்பாடு ஆகியவை கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகின்றன. ஏஐயிடம் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னணியில், பல லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தரவு மையங்களில் உள்ள சர்வர்களின் வெப்பத்தைத் தணிக்கச் சுத்தமான குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகளின்படி, ChatGPT-யிடம் 20 முதல் 50 கேள்விகள் கேட்டால், சுமார் ஒரு அரை லிட்டர் தண்ணீர் செலவிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தரவு மையங்களில் உள்ள சர்வர்களின் வெப்பத்தைத் தணிக்கச் சுத்தமான குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் தரவு மையங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட குடிநீரின் அளவு, 60 கோடி மக்கள் ஓர் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் தண்ணீருக்குச் சமமாகும். இது சுமார் 18 லட்சம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு இணையானது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஏஐ மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கினாலும், அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *