சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அப்டேட்ஸ்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரபோவதாக சமூக வலைதளங்களில கருத்துக்கள் பகிரப் பட்ட நிலையில அகில இந்திய சூர்யா நற்பணி மன்றம் இதனை மறுத்துள்ளது.

மேலும் நடிகர் சூர்யாவுக்கு அரசியல் வருவதாக எந்தவித எண்ணமும் இலையென்று நற்பணி மன்றம் விளக்கமளித்துள்ளது.

சூர்யாவின் 46

சூர்யாவின் 46 ஆவது படமாக‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகி உள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். சூர்யாவுடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (Vishwanath & Sons) படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘பட்டாம்பூச்சி’ ஆகும்.இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்தான் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு புதிய அப்டேட் கொடுத்து சூர்யாரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ (Viswanathan and Sons) திரைப்படத்தில் ஒரு துள்ளலான நடனப் பாடலை பாடியுள்ளார்.
இது ஒரு எனர்ஜியான குத்து பாடலாகவும், டான்ஸ் நம்பராகவும் இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கென் கருணாஸ் இதற்க்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அறிவிப்புகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *