மஞ்சணத்தி அப்டேட்

மஞ்சணத்தி என்னும் வார்த்தை அவரது சின்னம் என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் மனதிலும் பதிந்த அவரின் அணைத்து படத்திலும் பரவலாக பயன்படுத்தப் படும் வார்த்தையாகும்.அவர் முன்னர் இயக்கிய படங்களிலும் இந்த வார்த்தை இடம் பெற்ற பாடல்களே மிகவும் ஹிட் கொடுத்த பாடல்களாகும்.

இந்நிலையில்தான் இயக்குனர் மாரி செல்வராஜின் 6 வது படம் உருவாக்கப் பட இருக்கிறது அதற்க்கு மஞ்சணத்தி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.இதில் கயாடு லோஹர் மற்றும் பிரியங்கா மோகன், கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த தலைப்பும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ் அவரிடம் தொகுப்பாளர்

“உங்கள் படங்களில் வரும் அப்பா கதாபாத்திரங்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது” என்று வினவியதற்கு “பரியேறும் பெருமாள் அப்பா தான் அந்த கதாபாத்திரம் என் உண்மையான அப்பாவின் கதாபாத்திரத்தை ஒன்றியுள்ளது.மற்ற அப்பாக்கள் என் அப்பா அதுபோல இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனையாக சித்தரித்தது” என்று கூறினார்.

தொகுப்பாளர் மஞ்சணத்தி திரைப்படத்திலும் இது போன்ற அப்பா கதாபாத்திரம் இருக்குமா? என வினவியதற்கு
மாரிசெல்வராஜ்.

“மஞ்சணத்தியில் எனது அம்மா இருப்பார்” என பதிலளித்தார்.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *