‘ஜனநாயகன்’க்கு 13 கட்… ரிலீஸ் தேதி எப்போது?

நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், மறுஆய்வுக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தணிக்கை சான்றிதழை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கு மீண்டும் முழுமையாக விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனமான KVN Productions, நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்று, படத்தை தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவுக்கு அனுப்பியது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது.

தற்போது, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 13 கட்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டதுடன், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தையும் சேர்க்க தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 43 நொடிகள் நீக்கப்பட்ட நிலையில், படத்தின் மொத்த நீளம் 180 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த மாதத்திலேயே ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *