தூங்குவது குற்றமா? மருத்துவர்களின் பதில் என்ன?
பலர் இன்று தூக்கம் என்பது சோம்பேறித்தனத்தின் அடையாளமாக கருதுகின்றனர்.அது ஒரு ஆடம்பரத்தின் அளவுகோல் என்று எண்ணுகின்றனர்.சுமார் ஒரு மனிதனின் உடலுக்கு ஏழிலிருந்து எட்டு மணி நேரம் வரை நிம்மதியான ஓய்வு தேவைப் படுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை எனவே தூக்கம் ஆடம்பரமல்ல அது அத்தியாவசியமே ஆகையால், அனைவரையும் தங்களது உடலுக்கு தேவையான ஓய்வு அளிப்பது என்பது முக்கியமான ஒன்று.

தூங்குவது உடலிற்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் நல்ல நலனைக் கொடுக்கிறது.சுறுசுறுப்பாக இருப்பதும் இயங்கிக்கொண்டே இருப்பதுமே வெற்றியின் ரகசியமாக கருதுகின்றனர். ஆனால் அப்படி இருப்பதற்கு நல்ல தூக்கம்தான் முக்கியம் என்பதை புரிந்து தூக்கத்தை துறக்காமல் இருப்பது மேன்மை என்கின்றனர் மருத்துவர்கள்

