வசூலில் புதிய சாதனை “பெத்தி”

இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் நேற்று உலகளவில் வெளியான படம் ‘பெத்தி’. இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துளள்ளனர்.

அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘பெத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளிலேயே ரூ.135.36 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

விளையாட்டை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் நாளிலேயே மாபெரும் வரவேற்பையும், கணிசமான வசூலையும் பெற்றுள்ளதால், வரும் நாட்களிலும் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.

ராம் சரண் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம், தற்போது வசூல் வேட்டையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *