துருவ் விக்ரமுக்கு பேக் டு பேக் அப்டேட்.. அடுத்த படத்தின் டைட்டில் எப்போது?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன் காளமாடன்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. பிரபல தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம், அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தைக் கொண்டதாக உருவாகிறது. துருவ் விக்ரம் இதுவரை ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில், தற்போது முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும், துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி இப்படத்தின் தலைப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில் படத்தில் நடிக்கும் முழு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் மற்றொரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது. இதனால் துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் அப்டேட்கள் காத்திருக்கின்றன.

