இந்த வாரம் OTT-யில் வெளியாகிய புதிய படங்கள் மற்றும் தொடர்கள்… என்னென்ன தெரியுமா?

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக, OTT தளங்களிலும் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த வாரம் Prime Video, Netflix, JioHotstar மற்றும் Sun NXT உள்ளிட்ட முன்னணி OTT தளங்களில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல புதிய படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் குறித்து பார்க்கலாம்.

ஜூன் 10-ஆம் தேதி “Every Year After” என்ற ஆங்கில மொழித் தொடர் Prime Video-வில் வெளியானது. தொடர்ந்து, ஜூன் 12-ஆம் தேதி ஹிந்தி மொழியில் உருவான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான “Raakh” வெளியாகியுள்ளது. அதே நாளில், சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய “கருப்பு” திரைப்படமும் Prime Video-வில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அநீதிக்கு எதிராக நீதிக்காக போராடும் ஹீரோவின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து OTT-யில் வெளியாகியுள்ளது. மேலும், “Over Your Dead Body” என்ற ஆங்கில திரைப்படமும் ஜூன் 12-ஆம் தேதி Prime Video-வில் வெளியாகியுள்ளது.

Netflix தளத்தில் இந்த வாரம் ஹிந்தி மொழித் திரைப்படமான “Bhooth Bangla” ஜூன் 12-ஆம் தேதி வெளியாகியுள்ளது.

JioHotstar-ல் இந்த வாரம் வெளியாகியுள்ள “Dridam” என்ற தெலுங்கு திரைப்படம், மலைப்பகுதியில் பொறுப்பேற்கும் இளம் காவல் அதிகாரி எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்ட கதையாக அமைந்துள்ளது.

Sun NXT தளத்தில் “ரமணி கல்யாணம்” (Ramani Kalyanam) திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *