ஓடிடியில் வெளியான பிறகும் வசூல் வேட்டை தொடரும் ‘ப்ளாாஸ்ட்’…

சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் மே 28ஆம் தேதி வெளியான ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம், அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவான ஆக்‌ஷன் திரைப்படமாகும். வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் சுமார் ₹1.25 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.

இன்றுடன் படம் வெளியாகி 37 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் சுமார் ₹20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, தற்போது மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. இதுவரை உலகளவில் ₹76 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையில், ஜூன் 25ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும், படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *