Start Run Stop Drugs’ மாரத்தான்… மக்களோடு மக்களாக முதலமைச்சர்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் இணைந்து அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, “போதைப்பொருளில்லாத தமிழகம்” என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் முன்னதாக நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விழிப்புணர்வு வாசகத்தை எழுதி கையொப்பமிட்டார்.

தொடர்ந்து, போதை விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்து அதனை ஏற்றுக்கொண்டார். “நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் போதைப்பொருளை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்.” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *