புதிய சாதனை படைத்த ரொனால்டோ!

ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் நாளுக்கு நாள் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், நேற்று அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி அபார வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆட்டத்தின் 6 மற்றும் 39ஆவது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

மேலும், நுனோ மென்டஸ், ரஃபேல் லியாவோ மற்றும் நுமடோவ் ஆகியோர் அணியின் மற்ற கோல்களை அடித்தனர்.

இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் 6 வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.

இதுமட்டுமின்றி, உலகக்கோப்பை வரலாற்றில் கோல் அடித்த இரண்டாவது அதிக வயதான வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் 42 வயதில் கோல் அடித்த ரோஜர் மில்லா முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *