காமராஜ் நகர் தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்! MLA JCM திறந்து வைத்தார்

புதுவை காமராஜ் நகர் தொகுதியில் உள்ள செல்லன் நகர் மற்றும் சுந்தரமூர்த்தி நகரில் பொதுமக்களின் பல நாள் கோரிக்கையாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் எம்.எல்.ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகி அதன் தரத்தை உறுதி செய்த அவர் குடிநீரை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரி பகுதி முழுவதும் 50 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதன் முதலில் காமராஜ் நகர் தொகுதியில் தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் நிர்வாக பொதுச் செயலாளர் ராம்குமார் மாநில செயலாளர் ரவி ராஜாராம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *