கூட்டணியை கைவிடுகிறதா காங்கிரஸ் ? | தவெக vs பாஜக | மத்தியில் மாறும் அரசியல் களம்?

கூட்டணியை கைவிடுகிறதா காங்கிரஸ் ? | தவெக vs காங்கிரஸ் | மத்தியில் மாறும் அரசியல் களம்?

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தவெக தலைவரான விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியை கைப்பற்றியிருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் சமூக வலைதள ரீல்ஸ்கள் வெளியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் ஒரு பாரத பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். அவர் முதலமைச்சர் விஜயை மனதில் வைத்தே இந்தக் கருத்தை தெரிவித்ததாக அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், தவெக தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியே எதிர்கால பிரதமர் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற பேச்சு கூட்டணிக்குள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், “தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும்” என ஆதவ் அர்ஜுனா கூறியது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்பது வெறும் யூகம்தான் என்றும் தெரிவித்தார். அதற்கு தற்போது பதிலளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், விஜயை அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பிரதமராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்க வேண்டும் என தொண்டர்கள் முழக்கமிடுவதாகவும், அதனை எல்லாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழகத்தில் தற்போதைய ஆட்சி அமைய முதலில் ஆதரவு அளித்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.

ஆளும் தவெக அரசின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரே, அமைச்சர்கள் கூறும் கருத்துகளை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *